Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய், அஜித் ரசிகர்களால் காயமடைந்திருப்போம்.. டேபிளை உடைத்தனர்.. லண்டன் கார் ரசிகர்கள் பரபர புகார்

லண்டன்: லண்டனில் நடைபெற்ற லீமான்ஸ் கார் பந்தயத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அதிக அளவு கூடியது பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தியதாக அங்கு வந்திருந்த உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

நடிகர் அஜித் சினிமாவில் அவ்வப்போது கொஞ்சம் பிரேக் எடுத்துவிட்டு கார் பந்தயத்தில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். இந்த சூழலில் அண்மையில் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் கார்பந்தய தளத்தில் லீமான்ஸ் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Ajith Vijay race

நடிகர் அஜித்தின் அழைப்பின் பேரில் விஜய் அந்த போட்டியை காண வந்திருந்தார். இதனை அடுத்து லண்டனில் வசிக்கும் தமிழ் மக்கள் அதிக அளவு இந்த போட்டியை காணக்கூடினர். விஜய் மற்றும் அஜித்தை ஒரே இடத்தில் பார்த்ததால் அனைவரும் துள்ளி குதித்து கூக்குரலிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சச்சின்,டிராவிட்டுக்கு பிசிசிஐயில் முக்கிய பொறுப்பு.. நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது-கவாஸ்கர் கருத்து

சச்சின்,டிராவிட்டுக்கு பிசிசிஐயில் முக்கிய பொறுப்பு.. நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது-கவாஸ்கர் கருத்து

ஆனால் இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கார் பந்தய ரசிகர்கள், இந்த இரண்டு நட்சத்திரங்களை காண இந்தியாவை சேர்ந்த பல ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்கள் இருவரையும் கண்ட பிறகு உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்.

இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அங்கு இருந்த உணவு கூடத்தில் உள்ள டேபிள்கள் எல்லாம் சேதமானது. உற்சாக மிகுதியில் துள்ளி குதித்த அந்த கூட்டத்தால் எங்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கும். நல்லவேளை நாங்கள் உயிர்பிழைத்தோம். நமக்கு அந்த இரண்டு ஸ்டார்களும் யார் என்று தெரியவில்லை என்றாலும், இவர்களை பின் தொடர ஒரு பெரிய கூட்டமே இந்தியாவில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிந்தும் முறையான பாதுகாப்பை செய்ய சில்வர்ஸ்டோன் நிர்வாகிகள் தவறிவிட்டனர்.

இனி இது போல் ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று ஒருவர் பதிவிட்டு இருந்தார்.மற்றொருவர் கூட்டம் அதிகளவு கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருந்தது. நல்ல வேலை நாங்கள் தப்பித்தோம் என்று பதிவிட்டு இருந்தார். எங்களுக்கு இது நல்ல சூழலாக அமையவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

கோப்பை பெற மாட்டோம் என சொல்லிவிட்டு மோஷின் நக்வியிடம் சிரித்து பேசியது ஏன்? பிசிசிஐ விளக்கம்

Also Read

கோப்பை பெற மாட்டோம் என சொல்லிவிட்டு மோஷின் நக்வியிடம் சிரித்து பேசியது ஏன்? பிசிசிஐ விளக்கம்

இந்த பதிவுகளுக்கு கீழ் ரிப்ளை செய்துள்ள இந்திய ரசிகர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் விஜயை பார்க்க கரூரில் பெரிய கூட்டம் கூடி 41 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதன் மூலம் பொது இடத்தில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை இந்தியர்கள் பள்ளி கல்லூரி காலத்தில் இருந்து நாம் தனியாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பதிவிட்டுள்ளனர்.

Story first published: Tuesday, September 15, 2026, 12:16 [IST]
Other articles published on Sep 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+