Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடும் விஜய் ஹசாரே போட்டிகளை எந்த சேனல், ஒடிடியில் பார்ப்பது?

மும்பை: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, 2025-26 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று மீண்டும் களமிறங்கி உள்ளனர். கோலி டெல்லி அணிக்காகவும், ரோஹித் சர்மா மும்பை அணிக்காகவும் விளையாடத் தயாராகி வருகின்றனர்.

நாட்டின் முன்னணி உள்நாட்டு தொடர்களில் ஒன்றான இதில், இரு பெரும் வீரர்களின் வருகை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிசம்பர் 24, புதன்கிழமை அன்று இவர்கள் தங்கள் அணிகளுக்கான முதல் போட்டியில் களம் காண்கின்றனர்.

டெல்லி அணி, தங்களின் தொடக்கப் போட்டியில் ஆந்திர அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கடைசி நேரத்தில் இந்த ஆட்டம் பி.சி.சி.ஐ சிறப்பு பயிற்சி மையத்திற்கு (CoE) மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு இந்த போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல், மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்த முடிவு செய்துள்ளது.

மறுபுறம், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி, சிக்கிம் அணியுடன் தங்கள் முதல் போட்டியில் மோதவுள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பை அணி உத்தரகாண்டை எதிர்கொள்கிறது. மும்பை அணிக்கான இந்த இரண்டு போட்டிகளும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற உள்ளன. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்குத் தொடங்கும்.

இந்த முக்கிய விஜய் ஹசாரே டிராபி போட்டிகள் குறித்த நேரடி ஒளிபரப்பு குறித்த தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2025-26 விஜய் ஹசாரே டிராபி சீசனின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி பார்ட்னராக JioStar நிறுவனம் இருந்தாலும், இந்த போட்டிகள் தொலைக்காட்சியிலோ அல்லது JioStar தளத்திலோ நேரடியாக ஒளிபரப்பப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் போட்டிகளை நேரில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தமிழ்நாடு, புதுச்சேரி அணிகள் மோதும் ஆட்டமும், ஐதராபாத் உபி அணிகள் மோதும் ஆட்டமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Story first published: Wednesday, December 24, 2025, 9:21 [IST]
Other articles published on Dec 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+