Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது ODI போட்டியிலும் சூர்யா, இஷான் இல்லையா??.. பேட்டிங் கோச் தந்த முக்கிய அப்டேட்.. என்ன காரணம்!

திருவனந்தபுரம்: இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய பேட்டிங்கில் எந்தவித மாற்றமும் இருக்காது என்பது போல பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசியுள்ளார்.

இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒயிட் வாஷ் செய்வதற்காக இந்திய அணியும், எப்படியாவது பதிலடி கொடுத்துவிட வேண்டும் என இலங்கை அணியும் முணைப்பு காட்டுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

 3வது போட்டி

3வது போட்டி

இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே 2 - 0 என கைப்பற்றிவிட்ட சூழலிலும் ப்ளேயிங் 11-ஐ பார்த்து ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிரடி வீரர்களான இஷான் கிஷாம் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இரண்டு பேருமே வெளியே அமரவைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் 3வது போட்டியில் அணியில் இடம்பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் ரத்தோர் பதில்

விக்ரம் ரத்தோர் பதில்

இஷான் மற்றும் சூர்யகுமார் யாதவை அணிக்குள் சேர்ப்பதற்காக சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வெளியேற்றப்படுவார்கள் எனத்தெரிகிறது. இந்நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்பது போல பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசியுள்ளார். அதில், இஷான் மற்றும் சூர்யகுமாரை யாருமே வெளியே அமருங்கள் என கட்டாயப்படுத்தவில்லை. மற்றவர்கள் சிறப்பாக இருப்பதால் வாய்ப்பு பெறுகிறார்கள் என்று தான் நினைக்க வேண்டும்.

புரிந்துக்கொள்வார்கள்

புரிந்துக்கொள்வார்கள்

கிரிக்கெட் வீரர்கள் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும். தங்களது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் வரையில் கடினமாக பயிற்சி செய்ய வேண்டும். எப்போது அழைக்கப்படுகின்றனரோ, அப்போது தங்களது ஃபார்மை நிரூபிக்க வேண்டும். பின்னர் தானாக அணியில் நிரந்தர இடம் கிடைத்துவிடும் என ரத்தோர் கூறியுள்ளார்.

சூர்யகுமாரின் திறமை

சூர்யகுமாரின் திறமை

சூர்யகுமார் யாதவுக்கு நிறைய திறமைகள் உள்ளன. நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். ஆனால் தற்போதைக்கு அவர் ரிசர்வ் வீரராக இருப்பதே நல்லது. அவருக்கான நேரம் வரும் போது சிறப்பாக ஆடி தனது இடத்தை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். சூர்யாவை போன்று எந்த சூழலில் வேண்டுமானாலும் விளையாடும் வீரர் அணியில் இருப்பது சிறந்தது எனக்கூறினார்.

Story first published: Saturday, January 14, 2023, 22:10 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+