Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

222 ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்ட தோனி.. தடுமாறிய சிஎஸ்கேவை காப்பாற்றி துபே.. DCக்கு கௌரவ இலக்கு

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக சிஎஸ்கே நிர்ணயித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வென்றால், ஐபிஎல் புள்ளி பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்படும்.

இதனால் பல்வேறு அணிகள், இன்று சிஎஸ்கேக்கு தான் ஆதரவாக உள்ளனர். இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் களமிறங்கிய கான்வே 13 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

 Vintage batting from Dhoni puts csk in to fighting total vs delhi capitals

அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 18 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். எனினும் அவர் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோயின் அலி 7 ரன்களிலும், ரஹானே 21 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து சிவம் துபே 3 சிக்சர் பறக்கவிட்டு, சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். எனினும் 12 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் சிவம் துபே முக்கிய கட்டத்தில் வெளியேறினார். இதனையடுத்து சிஎஸ்கே அணி தடுமாறிய போது களத்திற்கு வந்த தோனி 9 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். இதில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். ஜடேஜா தன் பங்கிற்கு 16 பந்தில் 21 ரன்கள் சேர்க்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே அணி 140 ரன்களை தான் அடித்திருக்க வேண்டியது. ஆனால் 19வது ஓவரில் தோனியும்,ஜடேஜாவும் இணைந்து 21 ரன்களை சேர்த்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய டெல்லி அணியின் அக்சர் பட்டேல்,ஆடுகளம் தோய்வாக இருப்பதால், இது சவாலான இலக்கு தான் என்று கூறினார்.

Story first published: Wednesday, May 10, 2023, 21:30 [IST]
Other articles published on May 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+