நம்பர் 1 கோலி, பும்ரா.. நம்பர் 2 ரோகித் சர்மா.. தரவரிசையில் கெத்து காட்டிய இந்திய வீரர்கள்!
Recommended Video
மும்பை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தங்களது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த பட்டியலில் விராட் கோலி 895 புள்ளிகள் பெற்று பேட்ஸ்மேன் பிரிவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இதேபோல பௌலர்கள் பிரிவில் 797 புள்ளிகள் பெற்று பும்ரா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களின் கூட்டு முயற்சியில் இந்தியா சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்துவரும் நிலையில், தரவரிசை குறித்த இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பல தொடர்களில் வெற்றி
இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தலைமையில் இந்திய அணி சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த வங்க தேசத்திற்கு எதிரான தொடரிலும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

டிசம்பர் 6ல் துவக்கம்
வரும் 6ம் தேதி துவங்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும் 3 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் பல ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கவுள்ளது.

கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 895 புள்ளிகள் பெற்று ஆட்டக்காரர் பிரிவில் கோலியும், 797 புள்ளிகள் பெற்று பௌலர்களுக்கான பிரிவில் பும்ராவும் தங்களது முதலிடத்தை தக்க வைத்துள்ளனர்.

அனைத்து பிரிவுகளிலும் தேர்வு
விராட் கோலியை தொடர்ந்து தரவரிசை பட்டியலில் அடுத்த இடத்தை ரோகித் ஷர்மா பிடித்துள்ளார். அவர் மூன்று பிரிவுகளிலும் தன்னை நிரூபித்துள்ளார்.

டிரெண்ட் போல்ட் 2வது இடம்
பௌலர்கள் பிரிவில் பும்ரா முதலிடத்தை தக்க வைத்துள்ள நிலையில், நியூசிலாந்தின் மிகச்சிறந்த பௌலராக போற்றப்படும் டிரெண்ட் போல்ட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் 10 இடங்களில் இடம்பிடிப்பு
இதனிடையே இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 246 புள்ளிகளுடன் உலக அளவில் ஆல்ரவுண்டர்கள் பிரிவில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவில் இருந்து இந்த 10 இடங்களில் இடம்பிடித்துள்ள ஒரே ஆட்டக்காரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications