Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதோ பாருங்கய்யா? விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.. கிங் கணக்கில் வீக் போல !

டெல்லி : தற்போதைய தலைமுறையில் இந்திய கிரிக்கெட்டில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தில் உடைய வீரர் என்றால் அது விராட் கோலி தான். விராட் கோலி இளம் வயதில் கிரிக்கெட்டில் பெரிய வீரராக உருவெடுத்து தனது 19-வது வயதிலே அண்டர் 19 அணியை உலக கோப்பையில் தலைமை தாங்கி இருக்கிறார்.அதன் பிறகு விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் உடனடியாக காலடி எடுத்து வைத்தார்.

இதனால் விராட் கோலி படிப்பு குறித்து ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. கல்லூரி படிப்பை முடிக்க விராட் கோலிக்கு நிச்சயம் வாய்ப்பு இருந்திருக்காது. இதனால் விராட் கோலி பள்ளி பருவத்தில் சுட்டியாக இருந்தாரா? இல்லை மோசமாக செயல்பட்டாரா என்று ரசிகர்கள் இடையே ஒரு சந்தேகம் நிச்சயம் இருந்து.

Virat kohli 10th standard mark sheet attracts fans attention

இந்த நிலையில் விராட் கோலியின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் சான்றிதழ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி பெற்ற மதிப்பெண்களை தற்போது பார்க்கலாம். விராட் கோலி 2004 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள சேவியர் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார்.

விராட் கோலி ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் வாங்கி ஏ1 கிரேடு பெற்றுள்ளார். அதேபோன்று மொழிப்பாடமான ஹிந்தியில் விராட் கோலி 75 மதிப்பெண்கள் பெற்று பி1 கிரேட் பெற்றுள்ளார். மிகவும் கடினமான கணித பாடத்தில் விராட் கோலி 51 மதிப்பெண்கள் தான் பெற்று சி2 கிரேட் பெற்றுள்ளார்.

இதேபோன்று அறிவியல் தொழில்நுட்ப பாடத்தில் விராட் கோலி தேர்வில் 32 மதிப்பெண்களும் செய்முறை தேர்வில் 23 என மொத்தம் 55 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சோசியல் சயின்ஸ் பாடத்தில் விராட் கோலி 81 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

இதனால் ஒட்டுமொத்தமாக விராட் கோலி பாஸ் மதிப்பெண் பெற்றிருக்கிறார். கிரிக்கெட் எண்களில் கிங் ஆக இருந்த விராட் கோலி கணித எண்களில் தடுமாறி இருப்பது அவருடைய மதிப்பெண் சான்றிதழை பார்த்தால் தெரிகிறது.

Story first published: Thursday, March 30, 2023, 18:55 [IST]
Other articles published on Mar 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+