For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜாவை வைத்து அஸ்வின் முகத்தில் கரியை பூசிய கோலி...!! காரணம் இது தான்..!!

Recommended Video

Watch Video : Reason behind Ashwin not getting chance in test match?

ஜமைக்கா: பந்து நன்றாக திரும்பாத ஆடுகளத்திலும் கூட, விக்கெட்டுகளை வீழ்த்துவர் ஜடேஜா என்பதால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அஸ்வினை சேர்க்காமல் ஜடேஜாவை சேர்த்ததாக கேப்டன் கோலி விளக்கமளித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் அஸ்வின் இல்லை. 2வது போட்டியிலும் அவருக்கு அதே ஏமாற்றம் தான். அணியில் சேர்க்கப்படவில்லை.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார ரெக்கார்டை வைத்து உள்ள அஸ்வின் புறக்கணிப்பு முன்னாள் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சி கரமானதாக அமைந்தது. கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

7 வயசு பையங்கிட்ட இந்த கோலி பண்ணின காரியத்தை பாருங்க..! பக்கத்தில் அனுஷ்கா வேற... வைரல் வீடியோ..!7 வயசு பையங்கிட்ட இந்த கோலி பண்ணின காரியத்தை பாருங்க..! பக்கத்தில் அனுஷ்கா வேற... வைரல் வீடியோ..!

கோலி கருத்து

கோலி கருத்து

அஸ்வினின் புறக்கணிப்பு சர்ச்சையானது. ஆனாலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா. அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் கோலி. அப்போது அவர் பேசியதாவது:

சரியாக வீசுவார்

சரியாக வீசுவார்

இந்தியாவிற்கு வெளியே மிகவும் துல்லிய, நிலையான பவுலர் ஜடேஜா. அதனால் தான் ஜடேஜாவை ஆடும் லெவனில் எடுத்தோம். ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக இல்லாத சூழலிலும் அவர் சரியான ஏரியாக்களில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் ஜடேஜா.

ஜடேஜாவின் பலம்

ஜடேஜாவின் பலம்

அனைத்து வகையிலும் தமது பங்களிப்பை திறம்பட செய்து கொண்டிருக்கிறார். அது தான் ஜடேஜாவின் பலம். அணிக்காக எப்போதுமே பங்களிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

எனது பணி சுலபம்

எனது பணி சுலபம்

அவர் பந்து வீசுவதற்கான தருணத்திற்காக காத்துக்கொண்டே இருப்பார். அது மாதிரியான ஒரு வீரர் அணியில் இருக்கும்போது என் போன்ற கேப்டனின் பணி ரொம்ப சுலபம் என்றார்.

Story first published: Wednesday, September 4, 2019, 10:06 [IST]
Other articles published on Sep 4, 2019
English summary
Virat Kohli about Ashwin drop against west indies series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X