Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இணைந்த இரு துருவங்கள்... கலகலப்பான சேட்டிங்கில் கிங் கோலி & ஹிட்மேன்

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது.

இதையொட்டி இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Virat Kohli and Rohit Sharma during the practice session ahead of the fourth Test against England

இந்நிலையில் இந்த பயிற்சியின்போது கிங் கோலி மற்றும் ஹிட்மேன் ரோகித் சர்மா இருவரும் ஒன்றாக அமர்ந்து கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி துவங்கி 8ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த புகைப்படங்களை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் இந்த பயிற்சிகளில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் இருவரும் அருகருகில் அமர்ந்து கலகலப்பாக பேசினர்.

இருவருக்கும் இடையில் மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில் இவ்வாறு அவர்கள் பேசியது ட்ரெண்டாகியுள்ளது.

Story first published: Monday, March 1, 2021, 17:20 [IST]
Other articles published on Mar 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+