Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி, ரோகித் சர்மா தலைமையின் கீழ் எந்த வீரர்கள் டெஸ்டில் அறிமுகமானார்கள்.. முழு பட்டியல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அடுத்தடுத்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இருவரும் இந்திய அணியில் தலைசிறந்த கேப்டனாகவும் விளங்கியிருக்கிறார்கள்.

இந்த வகையில் இந்த இரண்டு வீரர்களும் எத்தனை வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் அடுத்த லெவல் சென்றதற்கு விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி மிகவும் முக்கிய காரணமாக இருந்தது.

Virat kohli Rohit sharma India cricket team

விராட் கோலி பல வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கம் தந்திருக்கிறார். இந்த வகையில் விராட் கோலி 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்திருக்கிறார். அவரது தலைமையில் 13 வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

அதில் பிரித்விஷா, மாயங் அகர்வால், ஜெயந்த் யாதவ், நமன் ஒஜா, ஹனுமா விகாரி, ரிஷப் பண்ட், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், சுழற் பந்துவீச்சாளர் கரன் ஷர்மா, கருண் நாயர், ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர், வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, சுழற் பந்துவீச்சாளர் சபாஷ் நதீம் ஆகியோர் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். இதில் பும்ரா, ரிஷப் பன்ட் போன்ற வீரர்கள் பெரிய லெவலுக்கு சென்றார்கள்.

அந்த வகையில் ரோகித் சர்மா 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்திருக்கிறார். ரோகித் 2 ஆண்டுகளை கேப்டனாக இருந்தாலும் 11 வீரர்களுக்கு வாய்ப்பு தந்து இருக்கிறார். இதில் ஆகாஷ் தீப், விக்கெட் கீப்பர் கே எஸ் பரத், இசான் கிஷன், தொடக்கவீரர் ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பர் ஜூலை சர்பராஸ்கான், முகேஷ் குமார் தேவுதட் படிக்கல், ரஜத் பட்டிதார், பிரசித் கிருஷ்ணா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.

கங்குலி கேப்டனாக இருந்தபோது 19 வீரர்களையும் டிராவிட் கேப்டனாக இருந்தபோது 11 வீரர்களையும் தோனி கேப்டனாக இருந்த போது அதிகபட்சமாக 25 வீரர்களையும் ரகானே கேப்டனாக இருந்தபோது ஏழு வீரர்களையும் பும்ரா கேப்டன் ஆக இருந்தபோது இரண்டு வீரர்களையும் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது நான்கு வீரர்களையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 16, 2025, 14:35 [IST]
Other articles published on May 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+