Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித், விராட் கோலியை இணைந்து பார்ப்பது இதுவே கடைசி.. சாம்பியன்ஸ் கோப்பையுடன் முடியும் சகாப்தம்?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் வீரரான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் நாம் இணைந்து விளையாட பார்க்க போவது சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் கடைசியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இரு அணி வீரர்களும் தங்களுடைய கிரிக்கெட்டின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறார்கள்.

விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இணைந்து டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தார்கள். அதன் பிறகு இருவரும் சர்வதேச t20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகின்றனர்.

virat kohli rohit sharma champions trophy 2025 india cricket team


இதில் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா பங்கேற்பது என்பது கேள்விக்குறிதான். இந்த சூழலில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அனைத்து வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் இருவரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தான் இணைந்து விளையாட போகிறார்கள். அது மட்டுமில்லாமல் ரோகித் சர்மாவுக்கு தற்போது 38 வயது ஆகிவிட்டது. இதனால் ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

விராட் கோலி இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் விளையாடக்கூடும். இதனால் இனி சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவையும் விராட் கோலியையும் இணைந்து நாம் கடைசியாக பார்க்கப்போவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தான். ஒருவேளை ரோஹித் தன்னுடைய டெஸ்ட் ஃபார்மை மீட்டால் அவர் இங்கிலாந்து தொடரில் விராட் கோலியுடன் இணைந்து விளையாட கூடும்.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட் பொறுத்த வரை சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை என்றால் ரோகித் அதிரடியாக நீக்கப்படுவார்.இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இல்லை என்றாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த ஜோடி கடைசியாக இணைந்து விளையாட போவது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 95 இன்னிங்ஸ்களில் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். இதில் மொத்தமாக இந்த ஜோடி 5280 ரன்கள் அடித்திருக்கிறது. அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 246 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த ஜோடி 18 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், 17 முறை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்திருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியில் ரோகித் சர்மா கோலி ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

Story first published: Friday, January 10, 2025, 8:24 [IST]
Other articles published on Jan 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+