Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் இல்லாதது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே அவமானம்.. இங்கிலாந்து வீரர் கருத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது கிரிக்கெட்டுக்கே அவமானமான விஷயம் என்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வொக்ஸ் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வொக்ஸ், இந்திய தொடர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா போன்ற ஒரு பலமான அணியை எதிர்கொள்வது மிகவும் நல்ல விஷயம். இந்த தொடர் நிச்சயம் கடும் சவால்கள் நிறைந்த தொடராக இருக்கும்.

virat-kohli-and-rohit-sharma

விராட், ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு எதிராக நாங்கள் பல மறக்க முடியாத மோதல்களை களத்தில் வெளிப்படுத்தி இருக்கின்றோம். ஆனால் தற்போது அவர்கள் இல்லாதது நிச்சயம் கிரிக்கெட்டுக்கு ஒரு அவமானமான விஷயம். எனினும் இரண்டு ஸ்டார் வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணியின் பேட்டிங் திறமை அதிக அளவில் தான் இருக்கின்றது.

அணிக்கு வந்திருக்கும் புதிய வீரர்கள் நிச்சயம் நன்றாக விளையாடுவார்கள். அவர்களுடைய திறன் அதிக அளவு இருக்கிறது. இதில் பலரும் தங்களுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டத்தில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருக்கின்றார். அதுவும் அந்த ஆடுகளத்தில் ஒரு நாள் முழுவதும் அவர் பேட்டிங் செய்திருக்கின்றார்.

இது போன்ற ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம். சில நேரம் நாம் மிகவும் களத்தில் அமைதியாக இருக்க வேண்டும். சில நேரம் அடித்து விளையாட வேண்டும். தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்து 20 ஓவர்கள் வீசிய கிறிஸ் வொக்ஸ், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி 60 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார். இந்த இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது தமக்கு திருப்தியை அளிப்பதாகவும் கிறிஸ் வொக்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Sunday, June 8, 2025, 11:44 [IST]
Other articles published on Jun 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+