Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க 2 பேரையும் தூக்கிடுவாங்க.. தயவு செய்து, இதை செய்யுங்க.. கோலி, ரோகித்துக்கு இர்பான் வார்னிங்

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், இதில் இருவரும் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவர்கள் அணியை விட்டு நீக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் கடைசியாக ஐபிஎல் தொடரில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு ஓய்விலே இருந்ததால் இருவரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் 2027 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Virat kohli and Rohit sharma

இது குறித்து பேசிய அவர் 2027 உலக கோப்பையில் நீங்கள் இருவரும் விளையாட ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அதற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடியது உங்களுடைய உடல் தகுதி தான். ரோகித் சர்மா கடந்த சில நாட்களாக தன்னுடைய உடல் தகுதியை மெருகேற்றி வருகிறார். அதற்காக அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார். சாதாரணமாக உடல் தகுதியில் இருப்பதற்கும் விளையாட்டு தொடர்பாக உடல் தகுதி இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நீங்கள் இருவரும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட்டுகள் நீங்கள் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்றாகவே தெரியும். உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. தற்போது டி20 சர்வதேச போட்டிகளில் நீங்கள் விளையாடுவதில்லை.

எனவே ஒவ்வொரு போட்டிக்கும் இடையே நிறைய நாட்கள் இருக்கின்றது.அதற்காக நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 2027 உலக கோப்பை தொடரில் உங்களால் விளையாட முடியும். இந்திய அணியின் கேப்டன் பதவியில் ரோகித் சர்மா நீக்கப்பட்டு தற்போது கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் கில்லுக்கு மிகப்பெரிய பொறுப்பும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய மகிமையும் ரோகித் சர்மா வெள்ளை நிற கிரிக்கெட் சாதித்ததையும் தற்போது முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு கில்லுக்கு கிடைத்திருக்கிறது. எனவே இது மிகவும் முக்கியமான தருணம். தன்னுடைய நல்ல பார்மை அவர் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

Story first published: Monday, October 6, 2025, 19:55 [IST]
Other articles published on Oct 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+