Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி,ரோகித் அனுபவத்தை கடையில் வாங்க முடியாது.. வேண்டாம் என்றால் உங்கள் மீது தான் தவறு- அஸ்வின் சாடல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய தொடரில் தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தொடருக்கு பிறகு இருவரும் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காத நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் சாதிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த தொடருக்கு முன்பு இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கான்பூரில் நடைபெற்றது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மாவும் பங்கேற்று இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில் இருவரும் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

Rohit sharma Virat kohli

இதற்கான காரணம் குறித்து பேசி உள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், விராட் கோலி ரோஹித் சர்மாவின் சேவை உங்களுக்கு வேண்டும் என்றால் அதற்கான வழியை நீங்கள் கண்டுபிடித்து ஆகவேண்டும். இந்தியா ஏ தொடர் நடைபெற்று இருக்கும்போது நீங்கள் இருவரையும் அந்த தொடரில் வந்து விளையாடுங்கள் என்று கூறி இருக்க வேண்டும்.

ஏனென்றால் தற்போது 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அவ்வளவாக நடைபெறவில்லை. இந்திய அணி தற்போது ஒருநாள் தொடர்களில் விளையாடவில்லை என்றால் எங்களுடைய திட்டத்தில் நீங்கள் இல்லை என்று வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். ஒருவேளை இந்திய ஏ தொடரில் விளையாடவில்லை என்றால் விஜய் ஹசாரே கோப்பை தொடரிலாவது நீங்கள் விளையாட வேண்டும்.

ஏனென்றால் இதன் மூலம் நீங்கள் எந்த அளவுக்கு பேட்டிங் ஃபார்மில் இருக்கிறீர்கள் என்று தெரிந்துவிடும். ஆனால் முன்பு நான் கேள்விப்பட்ட விஷயம் சீனியர் வீரர்கள் பலரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் விளையாட விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் இந்திய ஏ போன்ற தொடர்களில் விளையாடுவதற்கான உத்வேகம் அவர்களுக்கு இருக்காது.

எனவே இது போன்ற கட்டத்தில் வாய்ப்புகள் வரும்போது, அவர்கள் வேண்டாம் என்று நிராகரித்து விடுவார்கள். ஆனால் இது போன்ற கட்டத்தில் அணி நிர்வாகம் தான் வீரர்களை கண்டிப்பாக அழைத்து நீங்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறவேண்டும். எந்த பயிற்சியாளரும், தேர்வு குழுவினரும் விராட் கோலியும் ரோகித் சர்மாவையும் அழைத்து உங்களுடைய சேவை எங்களுக்கு தேவையில்லை என்று சொல்லவே மாட்டார்கள்.

அவர்களுடைய அனுபவம் உங்களால் எந்த கடையிலும் வாங்க முடியாது. அப்படி நீங்கள் சொன்னீர்கள் என்றால் பிரச்சனை உங்களிடம் தான். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம் இதனால் 2027 உலக கோப்பை தொடரில் இருவரும் விளையாடுவார்களா என்ற சந்தேகம் இருந்தால் அதற்கான வழியை வகுக்க வேண்டும். உலகக்கோப்பை தொடரில் இவ்வளவு கேள்விக்குறிகளுடன் சென்று விளையாட முடியாது.

என்னை கேட்டால் இருவருமே 2027 உலக கோப்பையில் விளையாட ஆர்வமாக தான் இருக்கிறார்கள். இதற்காக தங்களது உடல் தகுதியின் மீது இருவரும் முதலீடு செய்கிறார்கள். தேர்வு குழுவினர் அமர்ந்து பேசும்போது இந்த வீரர் தற்போது உடற்பயிற்சியில் செய்து வருகிறார். அதற்காக அவரை தேர்வு செய்யலாம் என்றெல்லாம் பேச மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணி எவ்வாறு இயங்காது என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 8, 2025, 23:38 [IST]
Other articles published on Oct 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+