Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

EXCLUSIVE - கோலி, ரோகித் யாராக இருந்தாலும் சரி, உடல்தகுதி இருந்தால் விளையாடலாம்- கபில் தேவ்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா இன்னும் எத்தனை நாட்கள் விளையாடப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்ற செய்திகள் அண்மையில் வெளியானது.

இதேபோன்று விராட் கோலி அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிகிறது. இந்த சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் எப்போது ஓய்வு பெறுவார்கள் என்று நமது மைக்கேல் தளம் சார்பாக முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ind vs ban india vs bangladesh rohit sharma virat kohli

இதற்கு பதில் அளித்த கபில்தேவ், என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் ஒவ்வொரு வீரர்களும் 26 வயதிலிருந்து 34 வயது வரை செயல்பாட்டுத் திறனில் உச்சத்தில் இருப்பார்கள். அதன்பிறகு வீரர்களின் உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து தான் அவர்களுடைய விளையாட்டு துறை வாழ்க்கை இருக்கும்.

ரவி சாஸ்திரியை எடுத்துக் கொண்டால், அவர் இளம் வயதிலேயே கிரிக்கெட்டை விட்டு சென்றுவிட்டார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். எனவே எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கும் உரிமை அந்தந்த கிரிக்கெட் வீரர்களிடம் மட்டும்தான் இருக்கிறது.

எனவே ஒவ்வொரு வீரர்களும் உடல் தகுதியுடன் இருந்து தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பாக விளையாடினால் போதும், தாங்கள் விளையாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பது தான் முக்கியம் என்று கபில்தேவ் கூறினார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதம் அடித்திருக்கிறார். ஆனால் விராட் கோலி 80 சதங்கள் தான் அடித்து இருக்கிறார்.இதேபோன்று சச்சின் ஒட்டுமொத்தமாக 34 ஆயிரத்து 357 ரன்கள் அடித்திருக்கிறார்.

விராட் கோலி 26 ஆயிரத்து 965 ரன்கள் அடித்து இருக்கின்றார். ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் 18,426 ரன்கள் அடித்து இருக்கிறார். ஆனால் விராட் கோலி அண்மையில் தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் சச்சின் அதிக ரன்கள் என்ற சாதனையை எடுக்க வேண்டும் என்றால் விராட் கோலி கிட்டத்தட்ட 4500 ரன்கள் அடிக்க வேண்டும்.

விராட் கோலிக்கு தற்போது 35 வயது ஆகிறது. அடுத்த உலக கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. அதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கிறது. ஒருவேளை விராட் கோலி அந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறார் என்றால் அவர் 38 வயதை கடந்து விடுவார். அதற்குள் அவர் நான்காயிரத்து ஐநூறு ரன்கள் அடிக்க வேண்டும். அதாவது ஆண்டுக்கு ஆயிரம் ரன்கள் அடிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு தற்போது அளவில் மிகவும் குறைவு என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 8,871 ரன்கள் தான் அடித்திருக்கிறார். ஆனால் சச்சின் 15, 921ரன்கள் அடித்திருக்கிறார். இதை விராட் கோலி கடக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 7000 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். விராட் கோலி ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2000 ரன்கள் அடித்தால் மட்டுமே சச்சினின் இந்த சாதனையை கடக்க முடியும். ஆனால் சச்சின் 100 சதங்கள் அடிக்கும் வாய்ப்பை வேண்டுமானால் விராட் கோலி தற்போது அளவில் முறியடிக்கலாம். அதற்கு குறைந்தபட்சம் விராட் கோலி ஒவ்வொரு ஆண்டும் 5 சதங்கள் அடிக்க வேண்டும்.

Story first published: Monday, September 23, 2024, 20:24 [IST]
Other articles published on Sep 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+