For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உரிமையை கேட்ட கோலி.. எதிர்ப்பு தெரிவித்த ஷகிபுல் ஹசன்.. கட்டி அணைத்து பாடம் எடுத்த கிங்.. சலசலப்பு

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்யும் கோலி, ஷகிபுல் ஹசன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்திய அணிக்கு இன்றைய ஆட்டத்தில் வெல்வது மிகவும் முக்கியமாகும். இதனால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடியது.

எனினும் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலியும், சூர்யகுமார் யாதவும் பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

185 ரன்கள் இலக்கு

185 ரன்கள் இலக்கு

16 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி தனி ஆளாக நின்று 44 பந்தில் 64 ரன்கள் சேர்த்தார். இறுதியில் அஸ்வின் 6 பந்தில் 13 ரன்களை பறக்கவிட்டார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

மீண்டும் சம்பவம்

மீண்டும் சம்பவம்

இந்த நிலையில், நடப்பு உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி நடுவர் எராஸ்மசிடம் உயரத்திற்கு நோ பால் கேட்டார். அதற்கு நடுவர் வழங்கினார். இதில் தவறு ஏதும் இல்லை என்றாலும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதனை சர்ச்சை ஆக்கினர். தற்போது அதே போல ஒரு சம்பவம் நடைபெற்றது.

நோ பால்

நோ பால்

ஆட்டத்தின் 16வது ஓவரில் ஹசன் மகமுத் 2வது முறையாக பவுன்சர் பந்தை வீசினார். ஒரு ஒவருக்கு ஒரு பவுன்சர் மட்டும் தான் அனுமதிக்கப்படும். 2வது முறை வீசினால் அதற்கு நோ பால் அறிவிக்கப்பட்டு, ஃபிரி ஹிட் வழங்கப்படும். இந்த விதியின் காரணத்தால், நடுவர் எராஸ்மசிடம் விராட் கோலி நோ பால் கேட்டார்.

ஷகிபுல் ஹசன் எதிர்ப்பு?

ஷகிபுல் ஹசன் எதிர்ப்பு?

இதற்கு நடுவர்கள் நோ பால் வழங்கி ஃபிரி ஹிட் கொடுத்தனர். இதற்கு கடுப்பான ஷகிபுல் ஹசன்,நோ பாலா இல்லையா என்று நடுவர் பார்ப்பார் என்பது போல் கூறினார். இதற்கு விராட் கோலி அவர் தோள் மீது கை போட்டு எதோ கூற, இருவரும் சிரித்து கொண்டு முதுகில் தட்டி கொடுத்து சென்றனர்.

அது நடக்கவில்லை?

அது நடக்கவில்லை?

எனினும் இந்த நோ பாலால் கிடைத்த ப்ரி ஹிட்டில் இந்தியா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனிடையே, விராட் கோலி நோ பால் கேட்டதற்கு ஷகிபுல் ஹசன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ரன் ஓடும் போது இருவரும் மோதி கொள்ள நேரிட்டதால், ஷகிபுல் ஹசன் விராட் கோலியிடம் விளக்கம் அளிக்க வந்ததாகவும் கூறப்படுகிறது.

Story first published: Wednesday, November 2, 2022, 16:28 [IST]
Other articles published on Nov 2, 2022
English summary
Virat kohli and Shakib al Hassan exchanged their words during gameஉரிமையை கேட்ட கோலி.. எதிர்ப்பு தெரிவித்த ஷகிபுல் ஹசன்.. கட்டி அணைத்து பாடம் எடுத்த கிங்.. சலசலப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+