For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றி... கொண்டாட்டம்... கோலியின் சக்சஸ் பார்முலா...

பெங்களூரு : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்றி கொண்ட கையுடன் பெங்களூருவில் கால்பந்தாட்ட வீரர் சுனில் சேத்ரி மற்றும் அவரது மனைவி சோனம் பட்டார்ச்சார்ஜியுடன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனம் பட்டாச்சார்ஜி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். வித்தியாசமான நால்வரின் அழகான சந்திப்பு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இனிமையான தருணத்தை தங்களுக்கு அளித்த சுனில் சேத்ரி தம்பதிக்கு நன்றி தெரிவித்த அனுஷ்கா சர்மா அடுத்த முறை அழையா விருந்தாளியாக விருந்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கமெண்ட் அளித்துள்ளார்.

வெற்றி கொண்ட இந்தியா

வெற்றி கொண்ட இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா வென்றுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு துவங்கி இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 தொடரையும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரையும் இந்தியா கைகொண்டுள்ளது.

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்...

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்...

கிரிக்கெட் என்று வந்துவிட்டால் தீவிரமான ஆட்டத்தை பதிவு செய்யும் விராட் கோலி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தையும் விட்டு வைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய மனைவியுடன் கொண்டாட்டத் தருணங்களில் அவர் பங்கேற்றுவிடுவார்.

சுனில் சேத்ரியின் விருந்து

சுனில் சேத்ரியின் விருந்து

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கால்பந்தாட்ட வீரர் சுனில் சேத்ரியின் இல்லத்தில் நேற்று கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர்.

கால்பந்தாட்ட வீரரின் விருந்து

கால்பந்தாட்ட வீரரின் விருந்து

கிரிக்கெட்டை தவிர்த்து கால்பந்தாட்டத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் விராட் கோலி, கால்பந்தாட்ட வீரரின் வீட்டில் இரவு விருந்தில் பங்கேற்றார்.

அழகான இரவு என்று கமெண்ட்

இந்நிலையில் சுனில் சேத்ரியின் மனைவி சோனம் பட்டாச்சார்ஜி, தாங்கள் நால்வரும் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, வித்தியாசமான நால்வரின் கொண்டாட்டம் என்று தெரிவித்திருந்தார்.

அனுஷ்கா சர்மா கமெண்ட்

அனுஷ்கா சர்மா கமெண்ட்

சுனில் சேத்ரி மற்றும் சோனம் பட்டாச்சார்ஜியின் இந்த சிறப்பான விருந்தோம்பல் மிகவும் அழகானது என்று இந்த புகைப்படத்தின்கீழ் கமெண்ட் அளித்த அனுஷ்கா சர்மா, அடுத்த முறை அழைக்காவிட்டாலும் திடீரென விருந்துக்கு வந்துவிடுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Monday, January 20, 2020, 19:43 [IST]
Other articles published on Jan 20, 2020
English summary
Sunil Chhetri, Wife Sonam Host Virat Kohli, Anushka Sharma For Dinner
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+