For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச அளவில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்... விராட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்

Recommended Video

India vs West Indies 3rd ODI | Kohli as leading run scorer in all formats

மும்பை : இந்த ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. சொற்ப ரன்களே குறைந்த நிலையில் இந்த பட்டியலில் அவரை இரண்டாவதாக தொடர்கிறார் ரோகித் ஷர்மா.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் கேப்டன் விராட் கோலி 85 ரன்கள் அடித்த நிலையில் இந்த ஆண்டில் 3 வடிவங்களிலும் 2,455 ரன்களை குவித்து சர்வதேச அளவில் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

விராட் கோலியை தொடர்ந்து இந்த பட்டியலில் 2442 ரன்களை குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார் ரோகித் ஷர்மா. ஆயினும் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் ரன் குவிப்பில் இவர் முதலிடத்தில் உள்ளார்.

ஐசிசி தரவரிசையில் முதலிடம்

ஐசிசி தரவரிசையில் முதலிடம்

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாகவே இருந்தது. உலக கோப்பையை கைப்பற்ற முடியாவிட்டாலும், ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தை தொடர்ந்து இவர் தக்கவைத்துள்ளார்.

அதிக ரன்களை குவித்து முதலிடம்

அதிக ரன்களை குவித்து முதலிடம்

இந்நிலையில் இந்த ஆண்டில் நடைபெற்ற அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக ரன்களை குவித்து சர்வதேச அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. நேற்றைய போட்டியில் 85 ரன்களை விளாசிய விராட் கோலி, இந்த ஆண்டில் குவித்துள்ள ரன்கள் 2,455.

13 ரன்களே குறைவு

13 ரன்களே குறைவு

இந்நிலையில் 2,442 ரன்களை குவித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா. இவர் விராட் கோலியை விட 13 ரன்களே குறைவாக பெற்றுள்ளார். இவர் நேற்றைய போட்டியில் 63 ரன்களை குவித்தார்.

3வது இடத்தில் பாகிஸ்தான் வீரர்

3வது இடத்தில் பாகிஸ்தான் வீரர்

இந்த பட்டியலில் 2,082 ரன்களை குவித்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3வது இடத்தில் உள்ளார். 4வது மற்றும் 5வது இடத்தை ரோஸ் டெய்லர் மற்றும் ஜோ ரூட் பிடித்துள்ளனர். இவர்கள் முறையே 1,820 மற்றும் 1790 ரன்களை அடித்துள்ளனர்.

விராட்டை முந்திய ரோகித்

விராட்டை முந்திய ரோகித்

ஆயினும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி 1,377 ரன்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில் ரோகித் ஷர்மா 1,490 ரன்கள் அடித்து முன்னிலையில் உள்ளார். இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் சாய் ஹோப் 1,345 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

ரோகித் ஷர்மா 10 சதங்கள்

ரோகித் ஷர்மா 10 சதங்கள்

இந்த ஆண்டில் விராட் கோலி ஏழு சதங்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 254 ரன்களை குவித்துள்ளார். இதனிடையே, உலக கோப்பையில் அடித்த 5 சதங்கள் உள்பட இந்த ஆண்டில் ரோகித் ஷர்மா 10 சதங்களை அடித்துள்ளார்.

Story first published: Monday, December 23, 2019, 14:17 [IST]
Other articles published on Dec 23, 2019
English summary
Virat Kohli ends this year as Leading Run-scorer, Rohit Sharma follows him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X