டெல்லி போலீசுக்காக விராட் கோலி செஞ்ச வேலையை பாருங்க... மிகச்சிறப்பு!
டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் சிறப்பான அணியாக ஆர்சிபி உள்ளது. 3 போட்டிகளில் விளையாடி 3லும் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தன்னுடைய அணியின் சிறப்பான நிலைக்கு காரணமாக உள்ள ஆர்சிபி கேப்டன் விராட் கோலி சமூக அக்கறையுடன் மற்றொரு செயலையும் செய்துள்ளார்.

சிறப்பான அணி ஆர்சிபி
ஐபிஎல் 2021 தொடரின் சிறப்பான அணியாக மாறியுள்ளது ஆர்சிபி. கடந்த 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசன்களின் அதிரடிகளை அல்லது சொதப்பல்களை முறியடிக்கும் வகையில் அதன் ஆட்டம் இந்த சீசனில் உள்ளது. 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கோப்பையை வெல்லும் தீவிரம்
இந்த சீசனில் தன்னுடைய அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி அணிக்கு சரியான துவக்கத்தை தர தவறினாலும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் விராட் கோலி. இந்த முறை கோப்பையை வெல்லும் தீவிரம் அந்த அணி வீரர்களிடம் காணப்படுகிறது.

கோலியின் அறிவுரை
இந்திய கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருபவர் விராட் கோலி. ஆயினும் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அவரது செயல்பாடுகள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அவர் மக்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

மக்களுக்கு அறிவுரை
விராட் கோலி சமூக இடைவெளியை தானும் சரியான வகையில் கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் டெல்லி காவல்துறையுடன் இணைந்து அவர் பொதுமக்கள் மாஸ்க்குகளை அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி போஸ்ட் போட்டுள்ளார்.
பயன்படுத்திய டெல்லி போலீஸ்
இதையடுத்து அவரது அந்த வீடியோ போஸ்டை டெல்லி போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் டெல்லி போலீசாருடன் பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பை அளித்து மாஸ்க் அணிந்து கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications