Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை பார்த்து இனி யாரும் பயப்பட மாட்டார்கள்.. கடவுளின் மகனுக்கு இதான் நிலை- ஆகாஷ் சோப்ரா

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பார்த்து இனி யாரும் பயப்பட மாட்டார்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த மூன்று போட்டிகளில் சேர்த்து விராட் கோலி 93 ரன்கள் தான் சேர்த்தார். அதற்கு முன்பு வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களில் சேர்த்து 99 ரன்கள் தான் அடித்திருந்தால் இந்திய அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவி இருப்பதற்கு விராட் கோலியின் பார்ம் அவுட்டும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ind vs aus virat kohli rohit sharma

இந்த நிலையில் இது குறித்த கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, விராட் கோலியின் கடந்த 10 இன்னிங்ஸை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார். அதை எதிர்பார்த்த அளவு பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு முழுவதுமே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெருசாக சாதிக்கவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடாமல் விலகிவிட்டார். அது நிச்சயம் மிகப்பெரிய மிஸ் ஆக நான் கருதுகின்றேன். கடந்த சில ஆண்டுகளாகவே விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை சரியாக இல்லை. அதுவும் கடந்த 10 இன்னிங்ஸ்கலை பார்த்தோம் என்றால் அதுவும் நன்றாக அமையவில்லை. கோலி, சச்சின் மற்றும் விவியின் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்கள் களத்திற்கு வந்தாலே எதிரணி வீரர்கள் அஞ்சுவார்கள்.

ஆனால் தற்போது அப்படி ஒரு பிரமிப்பு விராட் கோலி இடம் இல்லை. விராட் கோலி பார்த்து எதிரணிகள் தற்போது பயப்படுவதில்லை. இதை நானாக சொல்லவில்லை. விராட் கோலி பேட்டிங் செய்ய வரும்போது எதிர் அணியின் உடல் மொழியை பார்த்தாலே அது உங்களுக்கே புரிந்துவிடும். தொடர்ந்து ஒரே மாதிரி கணிக்கத் தவறி விராட் கோலி ஆட்டம் இழந்து வருகிறார்.

புல்டாஸ் பந்தை கூட அவர் மிஸ் செய்கிறார். மேலும் பில்டரிடம் நேராக பந்தை அடித்து விட்டு ரன் ஓட முயற்சி செய்கின்றார். பந்து பேட்டில் எட்ஜ் ஆனதா இல்லையா என்று கூட அவருக்கு தெரியவில்லை. விராட் கோலி இரண்டு முறை டிஆர்எஸ் முடிவெடுத்து, இரண்டு முறை அவுட் ஆகி இருக்கின்றார். 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அபாரமாக விளையாடினார்.

விராட் கோலி கடவுளின் பிள்ளை. ஆனால் அதன் பிறகு அவர் சரியாக விளையாடவில்லை. அதுதான் உண்மை! இலங்கை தொடரிலும் ரன் அடிக்கவில்லை. வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து தொடரிலும் கோலி ரன் சேர்க்கவில்லை. கோலியின் 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் ஆண்டை பார்த்தாலே இதயம் வேகமாக துடிக்கின்றது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 5, 2024, 17:36 [IST]
Other articles published on Nov 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+