Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் மோதலால் விலகி ஓடும் கேப்டன் கோலி.. என்ன தான் நடக்குது?

மும்பை : இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆட அமெரிக்கா கிளம்ப உள்ளது. அதற்கு முன் கேப்டன் கோலி ஊடகங்களை சந்திக்க மாட்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல கடந்த சில நாட்களாக தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் ஊடகங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த ஒரு கேள்வி

அந்த ஒரு கேள்வி

திங்கள் அன்று இந்திய அணி அமெரிக்கா கிளம்ப உள்ள நிலையில், அதுவரை கோலி கலந்து கொள்ள நிகழ்ச்சிகளிலும் ஊடகங்கங்களுக்கு அவர் பேட்டி அளிக்க மாட்டார் என கூறப்பட்டுள்ளது. இத்தனைக்கும் காரணம், அந்த ஒரு கேள்வியை கேட்டு விடுவார்கள் என்ற பயம் தான் என்கிறார்கள்.

இந்திய அணியில் பரபர நிலை

இந்திய அணியில் பரபர நிலை

2019 உலகக்கோப்பை தொடரின் முடிவில் இந்திய அணியில் கேப்டன் கோலி - துணை கேப்டன் ரோஹித் சர்மா இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் மோதல் குறித்து பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

மோதல் உண்மையா?

மோதல் உண்மையா?

ஒருநாள் அணியின் கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மா முயற்சி செய்ததாகவும், கோலி அதை தடுக்க தன் ஓய்வு ரத்து செய்து விட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடுவதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் மோதல்

இன்ஸ்டாகிராம் மோதல்

மறுபுறம், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை ரோஹித் சர்மா அன்பாலோ செய்தார். அதற்கு பதிலடியாக அனுஷ்கா, மர்மமான ஒரு பதிவை போட்டு சூசகமாக ரோஹித் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.

பிசிசிஐ அமைதி

பிசிசிஐ அமைதி

இப்படி இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் கேப்டன் - துணை கேப்டன் மோதிக் கொண்டு இருக்கும் போது பிசிசிஐ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இது பற்றி உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினரிடம் கேட்டால் இது எல்லாமே பத்திரிக்கைகள் எழுதிய கட்டுக்கதை என முடித்துக் கொண்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லை

பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லை

இந்த நிலையில் தான், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு திங்களன்று இரவு இந்திய அணி அமெரிக்கா கிளம்ப உள்ள நிலையில், அதற்கு முன் ஊடகங்களை அவர் சந்திக்கப் போவதில்லை என கூறப்படுகிறது. ஒவ்வொரு வெளிநாட்டு தொடருக்கு முன்பும் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பை இந்த முறை புறக்கணித்துள்ளார் கேப்டன் கோலி.

கபடி விழா

கபடி விழா

நேற்று நடந்த புரோ கபடி விழாவில் கலந்து கொண்ட கோலி, அங்கே முன்பு திட்டமிடப்பட்டு இருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பைரத்து செய்துள்ளார். தொடர்ந்து ஊடகங்களை கோலி புறக்கணிப்பதற்கு காரணம், ரோஹித் சர்மா மோதல் குறித்து கேள்வியை தவிர்க்கத் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

மர்மம் என்ன?

மர்மம் என்ன?

கோலி விலகிச் செல்லும் இதே நேரத்தில், ரோஹித் சர்மா அமைதியாக இருக்கிறார். அவர் இது குறித்து வாய் திறக்கவில்லை. விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே என்ன தான் பிரச்சனை? பிரச்சனையை இப்போதே பேசித் தீர்க்காவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது வெடித்தால் என்ன செய்வது? பிசிசிஐ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல!

Story first published: Sunday, July 28, 2019, 10:21 [IST]
Other articles published on Jul 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+