Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ -கோலியை பார்த்து முறைத்த ஹர்திக் பாண்டியா.. கிங் கொடுத்த ரியாக்சன்.. பயிற்சியில் சிரிப்பலை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகின்ற நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சி செய்தனர்.

சிவப்பு நிற பந்தில் இருந்து வெள்ளை நிற பந்துக்கு இந்திய அணி வீரர்கள் மாறிய நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பயிற்சி களமாக இனிவரும் போட்டிகளை இந்திய அணி வீரர்கள் பார்க்க உள்ளனர்.

Virat kohli bizarre reaction after Hardik pandya stares him in practice session

இதில் ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் திரும்பி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு சுமார் இரண்டு மாத இடைவெளி அடுத்து ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.இந்த நிலையில் பார்பிடாசில் ஹர்திக் பாண்டியா தீவிர பயிற்சி செய்து வருகிறார். அணியில் தற்போது சீனியர் வீரராக விளங்கும் ஹர்திக் பாண்டியா வேகப் பந்து வீச்சையும் பார்க்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறார்.

தற்போது முகமது சிராஜும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இல்லை என்பதால் ஹர்திக் பாண்டியா தான் பந்துவீச்சு படையை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நிலையில் பயிற்சி செய்யும் போது உலகின் சிறந்த வீரரான விராட் கோலிக்கு அவர் பந்து வீசினார். சிறந்த வீரர்களுக்கு நாம் பந்து வீசி பயிற்சி செய்தால் தானே மற்ற வீரர்களுக்கு நாம் சிறப்பாக செயல்பட முடியும். அந்த யுக்தியை தான் ஹர்திக் பாண்டியா பயன்படுத்தினார்.

Virat kohli bizarre reaction after Hardik pandya stares him in practice session

அப்போது ஒரு பந்தை கோலி பளேர் என்று கவர் திசையில் கோலி அடித்தார். அது நிச்சயம் போட்டியாக இருந்திருந்தால் அது பவுண்டரியாக இருந்திருக்கும். எனினும் ஹர்திக் பாண்டியா விராட் கோலியை பார்த்து முறைத்து விட்டு சென்றார். ஆனால் இதனை நோட் செய்த விராட் கோலி உடனே ஹர்திக் பாண்டியாவை வம்பு இழுக்கும் வகையில் பவுண்டரி என செய்கையால் நடனம் ஆடினார்.

இதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். ஹர்திக் பாண்டியா உண்மையிலே கோபமாக பந்து வீசி விட்டு சென்ற நிலையில் வெறுப்பேற்றும் வகையில் கிங் கோலி செய்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Thursday, July 27, 2023, 18:50 [IST]
Other articles published on Jul 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+