3 ஐபிஎல் தொடர்களில் 500 ரன்கள்.. குருவை மிஞ்சிய கோஹ்லி
பெங்களூர்: சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை விராட் கோஹ்லி முறியடித்து, குருவை மிஞ்சிய சிஷ்யனாக பரிணமித்துள்ளார்.
விராட் கோஹ்லியின் ஆதர்ஷ குருவான, சச்சி டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடினார். அப்போது 2 தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் எடுத்தார்.

பெங்களூர் அணிக்காக, விராட் கோஹ்லி ஏற்கனவே 2 ஐபிஎல் தொடர்களில் 500 ரன்களை கடந்து சாதித்திருந்த நிலையில், நேற்று புனே அணிக்கு எதிரான, ஆட்டத்தில் 108 ரன்கள் விளாசி இந்த ஐபிஎல் தொடரிலும் 500 ரன்களை கடந்தார்.
இதன்மூலம், 3 ஐபிஎல் தொடர்களில் 500 ரன்களை கடந்த முதலாவது கேப்டன் என்ற பெருமையை கோஹ்லி பெற்றார். நேற்றைய ஆட்டத்தின்போது, 67 ரன்கள் எடுத்தால் 500 ரன்களை கடக்கலாம் என்ற நிலையில் களமிறங்கிய கோஹ்லி, 108 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் நின்றதோடு, புனே அணியை வீழ்த்த உதவியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications