Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. ! டி20 உலககோப்பையில் விராட் கோலி சாதனை.. பெரிய மைல்கல்லை எட்ட 11 ரன்கள் தேவை

சிட்னி : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில், விராட் கோலி இன்று நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து இரண்டு அரைசதம் மற்றும் ஒரு முறை கூட ஆட்டம் இழக்காமல் விராட் கோலி பட்டையை கிளப்பி வருகிறார்.

கோலி சாதனை

கோலி சாதனை

நடப்பு டி20 உலககோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் விராட் கோலி இன்று புதிய சாதனையை படைத்திருக்கிறார். டி20 உலக கோப்பை வரலாற்றில் விராட் கோலி 23 போட்டிகளில் விளையாடி தற்போது 989 ரன்கள் விளாசி இருக்கிறார்.

27 ரன்கள் தேவை

27 ரன்கள் தேவை

இதன் மூலம் இந்த பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இன்னும் 11 ரன்களை விராட் கோலி சேர்த்தால் ஆயிரம் ரன்கள் டி20 உலக கோப்பையில் ஜெயவர்தனேக்கு பிறகு அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெறுவார். இன்னும் 27 ரன்கள் கூடுதலாக அடித்தால் டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்து விடுவார்.

அதிக சராசரி

அதிக சராசரி

இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா 904 ரன்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பை முடிவில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் டாப் 2 இடத்தை பிடிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று டி20 உலக கோப்பையில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் பட்டியலில் விராட் கோலி 89.9 சராசரியை வைத்து முதலிடத்தில் இருக்கிறார்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

இரண்டாவது இடத்தில் 44.6 சராசரியுடன் பீட்டர்சனும், மூன்றாவது இடத்தில் 40.6 சராசரி உடன் டுமினியும், நான்காவது இடத்தில் 39.1 சராசரி உடன் ஜெயவர்த்தனைவும் , ரோகித் சர்மா 37.7 சராசரியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று சூரிய குமாரியாகவும் நடப்பாண்டில் புதிய சாதனை ஒன்றே படுத்திருக்கிறார் .

சூரியகுமார் முதலிடம்

சூரியகுமார் முதலிடம்

இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நடப்பாண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளி சூரியகுமார் முதல் இடத்தில் இருக்கிறார். சூரியகுமார் 25 ஆட்டங்களில் விளையாடி 867 ரன்களை விளாசி இருக்கிறார் இதில் அவருடைய ஸ்ட்ரெயிட் 184 ஆகும். இதன் மூலம் சர்வதே சிட்டி தரவரிசை பட்டியல் சூரியகுமார் உஸ்மானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, October 27, 2022, 18:37 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+