சச்சின் சாதனையை முறியடித்த கோலி.. முதல் முறையாக ஹரிஸ் ரவுஃப்க்கு சறுக்கல்.. மெய் சிலிர்க்கும் விவரம்
மெல்போர்ன் : 2022ஆம் ஆண்டு டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பிகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறார்.
160 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்திய போது, 31 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது விராட் கோலி 53 பந்தில் 82 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த ஆட்டத்தில் பல சாதனைகளை கோலி செய்து இருக்கிறார்.

2 சிக்சர்
குறிப்பாக ஹாரிஸ் ரவுஃப் ஓவரில் விராட் கோலி 19வது ஓவரின் கடைசியில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் 8 பந்துக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்து, கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை மாறியது. இதில் ஒரு மெய்சிலிர்க்கும் விசயம் என்றால், ஹாரிஸ் ரவுப் இதுவரை டி20 கிரிக்கெட்டில் 20 முறை 19வது ஓவரை வீசி இருக்கிறார்.

முதல் முறை
இதில் ஒரு முறை கூட ஹாரிஸ் ரவுப் சிக்சர் அடிக்கவிட்டது இல்லை. அப்படி ஒரு அபாயகரமான பவுலர் அவர்.மேலும், மெல்போர்ன் மைதானம் என்னுடைய சொந்த மண் போன்றது , அங்கு நிறைய போட்டியில் விளையாடி இருக்கிறேன் என்று ஹாரிஸ் ரவுஃப் கூறினார். ஆனால் கோலி, சிக்சர் அடித்து அவரது பந்துவீச்சையே சிதைத்துவிட்டார்.

அதிக அரைசதம்
இதே போன்று டி20 உலககோப்பையில் இந்தியா இலக்கை வெற்றிக்கரமாக துரத்திய போது இதுவரை கோலியை தவிர மற்ற இந்திய வீரர்கள் மொத்தமாக 6 அரைசதம் அடித்து இருக்கிறாகள். ஆனால் விராட் கோலி ஒருவர் மட்டும் தனியாக 6 அரைசதம் அடித்து இருக்கிறார். விராட் கோலியின் சர்வதேச டி20 சராசரி 51.97 ஆனது.

சச்சின் சாதனை முறியடிப்பு
இதே போன்று டி20 உலககோப்பையில் கோலியின் சராசரி 84. டி20 உலககோப்பையில் சேஸிங் செய்யும் போது கோலியின் சராசரி 270. அதுவே வெற்றிக்கரமான சேஸிங்கில் கோலியின் சராசரி 518 ஆகும். ஐசிசி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் இதுவரை 3 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய நிலையில் தற்போது கோலி 4 முறை வென்று முறியடித்துள்ளார். இதே போன்று ஐசிசி தொடர்களில் அதிக முறை அரைசதம் விளாசியவர்கள் பட்டியலில் சச்சின் 23 முறை அடித்திருந்தார். தற்போது கோலி 24 முறை விளாசி முதலிடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications