Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சாதனையை உடைத்த கோலி.. ஐசிசி தொடர்களில் நம்பர் 1.. அசுரத்தனமான ரெக்காட்ஸ்

லண்டன் : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.முதல் இன்னிங்சில் தடுமாறிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி வருகிறது.

குறிப்பாக நட்சத்திர வீரர் விராட் கோலி முதலில் 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி வருகிறார்.

Virat kohli breaks sachin tendulkar unique record in ICC Tournmaents

இந்திய அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவர் முடிவில் 164 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இருந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.

இந்த பட்டியலில் சச்சின், லக்ஷ்மன், டிராவிட், புஜாரா ஆகியோர் ஏற்கனவே இருக்கிறார்கள். இதேபோன்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படத்திருக்கிறார். இதில் ஐசிசி தொடர்களில் நாக் அவுட் ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் 14 இன்னிங்ஸில் 657 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி 660 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை முறியடித்திருக்கிறார். எனினும் விராட் கோலி 18 இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஆயிரம் ரன்களை குவித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் சச்சினும் அடுத்த இடத்தில் டான் பிராட்மேனும் இருக்கிறார்கள். இதேபோன்று ஐசிசி தொடர்களில் அதிக அரை சதம் ஐசிசி தொடரின் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றிருக்கிறார்.

Story first published: Saturday, June 10, 2023, 23:07 [IST]
Other articles published on Jun 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+