For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு வயசாகிப் போச்சு.. சச்சினின் 100 செஞ்சுரி ரெக்கார்டை அவரால்.. பிரையன் லாரா அதிரடி

மும்பை : சச்சின் டெண்டுல்கரின் 50 ஒருநாள் போட்டி சதங்கள் அடித்த சாதனையை சமீபத்தில் விராட் கோலி முறியடித்தார். ஆனால், அவரது 100 சர்வதேச சதம் அடித்த சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

சமீபத்தில் இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாராவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில் கோலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

விராட் கோலி தற்போது 80 சர்வதேச சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50, டெஸ்ட் போட்டிகளில் 29 மற்றும் சர்வதேச டி20யில் ஒரு சதம் அடித்துள்ளார். இதில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 49 சதம் என்ற சாதனையை கோலி முறியடித்து இருக்கிறார்.

Virat Kohli : Brian Lara it is tough job for Kohli to beat Sachin Tendulkars 100 century record

டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதம் அடித்துள்ளார். அதைத் தொடர் விராட் கோலிக்கு இன்னும் 22 சதங்கள் வேண்டும். டெஸ்ட் போட்டி என்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக சர்வதேச அளவில் 100 சதம் அடிக்க வேண்டும் என்றால் விராட் கோலிக்கு இன்னும் 20 சதங்கள் வேண்டும். அந்த 20 சதங்களை கோலி அடிப்பது மிகவும் கடினம் என கூறி இருக்கிறார் லாரா.

இது பற்றி பிரையன் லாரா பேசியது - "கோலிக்கு இப்போது என்ன வயது? 35 இல்லையா? அவர் 80 சதம் அடித்துள்ளார். இன்னும் 20 அடிக்க வேண்டும். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதம் அடித்தால் கூட சச்சின் சாதனையை தொட அவருக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் வேண்டும். அப்போது கோலிக்கு 39 வயது ஆகி விடும். இது கடினமான வேலை. மிகவும் கடினமான வேலை" என்றார்.

மேலும், "ஆனால், இதை யாராலும் உறுதியாக கூற முடியாது. கோலி, சச்சினின் 100 சதம் அடித்த சாதனையை முறியடித்து விடுவார் என கூறுபவர்கள் கிரிக்கெட்டின் லாஜிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 20 சதம் என்பது மிக அதிக தூரத்தில் உள்ளது. பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் மொத்த கிரிக்கெட் வாழ்விலும் 20 சதம் அடிக்க மாட்டார்கள். அதனால், நான் கோலி அதை செய்வார் என கூற மாட்டேன்" என்றார் லாரா.

மேலும், 'எனது வாழ்த்துகள் கோலிக்கு எப்போதும் உண்டு. சச்சின் டெண்டுல்கரை போல் அவரும் 100 சதங்கள் அடித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். சச்சின் ஒரு அன்பான நண்பர், நான் முன்பு கூறியது போல், நான் கோலியின் தீவிர ரசிகன்." என்று கூறினார் பிரையன் லாரா,

Story first published: Thursday, December 7, 2023, 23:22 [IST]
Other articles published on Dec 7, 2023
English summary
Virat Kohli : Brian Lara it is tough job for Kohli to beat Sachin Tendulkar's 100 century record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+