For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி புதிய சாதனை.. பாகிஸ்தானுக்கு பெரிய இலக்கு தான்.. ஆனால் இந்தியாவுக்கும் ஆபத்து தான்

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

Recommended Video

AsiaCup 2022 Rohit Sharma-க்கு Captaincy பயம் வந்துடுச்சி - Mohammed Hafeez *Cricket

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலும், சரி, கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் சரி இந்தியாவின் தொடக்க ஜோடி சரியில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

தற்போது அந்த விமர்சனத்துக்கு பதிலடி தரும் வகையில் ரோகித், ராகுல் ஜோடி இன்று பட்டையை கிளப்பினர். ஆடுகளம் இன்று கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது. இதனை பயன்படுத்தி கொண்ட ரோகித் சர்மா, பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

அதிவேக 50

அதிவேக 50

தனது டிரேட் மார்க் ஷாட்களை ரோகித் சர்மா அடிக்க தொடங்கியதும் ராக்கெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. மறுமுனையில் கேஎல் ராகுலும் தனது பழைய அதிரடியை காட்ட, பாகிஸ்தான் வீரர்கள் பதற தொடங்கினர். இதன் மூலம், இந்திய அணி 4.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 50 ரன்களை விளாசி சாதனை படைத்தது.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

ரோகித் சர்மா 28 ரன்கள் எடுத்த நிலையில், பந்தை தூக்கி அடிக்க கேட்ச் ஆனது. அப்போது வழக்கம் போல் ஒரு கேட்ச் பிடிக்க 2 வீரர்கள் ஓடி, இறுதியில் குஷ்தில் ஷா கேட்ச் பிடிக்க, பாகிஸ்தான் வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நன்றாக விளையாடி கொண்டிருந்த கேஎல் ராகுலும் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களத்துக்கு வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முற்பட்டு 13 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். தினேஷ் கார்த்திற்கு பதிலாக சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 14 ரன்கள் மட்டுமே சேர்க்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் டக் அவுட் ஆனார்.

கோலி சாதனை

கோலி சாதனை

ஒரு கட்டத்தில், ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தனது பழைய ஆட்டத்தை காட்டி ரசிகர்களுக்கு விராட் கோலி உற்சாகத்தை அளித்தார். 35 பந்துகளில் விராட் கோலி அரைசதம் விளாசியதன் மூலம், சர்வதேச டி20 போட்டியில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்களுக்கு ரன் அவுட்டாக, தீபக் ஹூடா 16 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

Story first published: Sunday, September 4, 2022, 21:48 [IST]
Other articles published on Sep 4, 2022
English summary
Virat kohli Brilliant innings set 182 runs target for Pakistan விராட் கோலி புதிய சாதனை.. பாகிஸ்தானுக்கு பெரிய இலக்கு தான்.. ஆனால் இந்தியாவுக்கும் ஆபத்து தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+