Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யை வெளுக்க காத்திருக்கும் விராட் கோலி.. டி20 போட்டியில் கோலியின் மகத்தான ரெக்கார்ட்

மொஹாலி: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மிட்செல் ஸ்டார்க் , ஸ்டோனிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெறவில்லை.

 Virat kohli brilliant record vs Australia in T20Is

இந்திய அணி, டி20 உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் நிலையில், முழு பலத்துடன் வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இந்த தொடரில் விராட் கோலிக்கு தொடக்க வீரராக அங்கீகாரம் தரப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். விராட் கோலி 18 இன்னிங்சில களமிறங்கி இருக்கிறார். இதில் 718 ரன்களை கோலி விளாசி இருக்கிறார்.

இதில் கோலியின் சராசரி கிட்டதட்ட 60 ரன்கள் ஆகும். 146 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள விராட் கோலி, 7 அரைசதங்கள் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி 22 சிக்சர்களை விளாசியுள்ளார். கோலி நல்ல பார்மில் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிக்கு அடுத்ததாக ஷிகர் தவான் 13 போட்டிகளில் 347 ரன்கள் அடித்துள்ளார். அதற்கு அடுத்த படியாக ரோகித் சர்மா 318 ரன்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ், ஹர்சல் பட்டேல் போன்றோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 போட்டியில் களமிறங்க உள்ளனர்.

Story first published: Thursday, September 15, 2022, 21:05 [IST]
Other articles published on Sep 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+