Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி பிறந்தநாள் விழா.. ஸ்பெஷலாக ஒரு நபருக்கு மட்டும் கேக் ஊட்டியது ஏன்? முக்கிய நபர் வரவில்லை

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஜிம்பாப்வே போட்டிக்கு தயாராகும் விதமாக மெல்போர்னில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விராட் கோலி சக அணி வீரர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்த பிறந்தநாள் விழா வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதல் விராட் கோலி தனது வெற்றிக்கு காரணமாக இருந்த நபருக்கு கேக் ஊட்டி விட்டு கொண்டாடினார்.

2 மாதம் விலகல்

2 மாதம் விலகல்

விராட் கோலி கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் 2022 செம்படம்பர் மாதம் வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறை கூட சதம் விளாசவில்லை. தாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூட விராட் கோலி பல பேட்டியில் கூறி இருந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2 மாதங்கள் விலகி இருந்தார்.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் மனோ தத்துவ நிபுணராக மீண்டும் பணியில் சேர்ந்தார் பேடி உப்டான். பேடி உப்டான் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அதன் பிறகு டிராவிட்டின் அறிவுறுத்தலின் படி, பேடி உப்டான் இந்திய அணியில் வந்து இணைந்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

அதன் பிறகு பேடி உப்டானுடன் விராட் கோலி இணைந்து பணிபுரிய தொடங்கினார். அதன் பிறகு விராட் கோலி தனது மன சிக்கலில் இருந்து விலகி தற்போது தான் பழைய விராட் கோலியாக திரும்பினார். விராட் கோலியின் மன சிக்கல் தீர்ந்த உடன், அவருடைய பேட்டிங்கிலும் ரன்கள் வர தொடங்கின. தற்போது பழைய கிங் கோலியாக இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்து வருகிறார்.

ரோகித் பங்கேற்கவில்லை

ரோகித் பங்கேற்கவில்லை

இதனால் தனது வெற்றியை கொண்டாடும் விதமாக பாடி உப்டானுக்கு தான் கோலி கேக் வெட்டி ஊட்டினார். இந்த நிலையில், விராட் கோலியின் பிறந்த நாள் விழாவில் ரோகித் சர்மா மட்டும் பங்கேற்கவில்லை. ரோகித்தை தவிர மற்ற அனைத்து வீரர்களும் இருந்தனர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Saturday, November 5, 2022, 14:06 [IST]
Other articles published on Nov 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+