Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபில்டிங்கில் விராட் கோலியின் முச்சதம்..பயிற்சியாளர் போல் வளம் வரும் மாணவன்..பேட்டிங்கில் சாதிப்பாரா

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறார்.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த நிலை பில்டிங்கில் முச்சதம் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஸ்லிப் பகுதியில் நின்று சாக்லேட் சாப்பிட்டதே நாம் பார்த்தோம்.

கோலிக்கு பெருமை

கோலிக்கு பெருமை

ஆனால் கேட்ச் பிடிப்பதெல்லாம் எனக்கு ஈசி என்பதை போல் அவர் ஒரு சம்பவம் செய்திருக்கிறார். அஸ்வின் வீசிய பந்தை ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் அடிக்க முற்பட்டபோது ,அது விராட் கோலி இடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

அதிக கேட்ச் பட்டியல்

அதிக கேட்ச் பட்டியல்

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 300 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற பெருமையும் விராட் கோலி படைத்தார்.முன்னதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 334 கேட்சுகளை பிடித்து இருக்கிறார். உலக அளவில் ஜெயவர்த்தனே 440 கேட்ச்களுடன் முதலிடத்திலும் ,இரண்டாவது இடத்தில் பாண்டிங் 364 கேட்ச்களுடனும், நியூசிலாந்து வீரர் டைலர் 351 கேட்ச்களுடனும் மூன்றாவது இடத்திலும் ,காலிஸ் 338 கேட்ச்களுடனும் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள். ஐந்தாவது இடத்தில் டிராவிட் ஆறாவது இடத்தில் பிளமிங் 306 கேட்ச்களுடன் விராட் கோலி 7வது இடத்திலும் இருக்கிறார்கள்.

இந்தியா வெற்றி பெறுமா?

இந்தியா வெற்றி பெறுமா?

இந்த பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடம் வரை செல்ல வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்புத் தொடரில் விராட் கோலியின் ஸ்லிப் கேட்ச் மோசமாக இருந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து பேட்டிங் போல் கேட்ச்க்கு என தனி பயிற்சியை விராட் கோலி மேற்கொண்டார். இந்த நிலையில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன்களை சேர்த்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி ,இந்திய வீரர்கள் இந்த தொடர் முழுவதும் கடினமான ஆடுகளத்தில் விளையாடி தடுமாறி வந்தார்கள். தற்போது அவர்களுக்கு ரன் சேர்க்க நல்ல ஆடுகளம் கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதலில் 480 ரன்கள் அடித்துள்ள நிலையில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Friday, March 10, 2023, 19:13 [IST]
Other articles published on Mar 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+