Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமே இப்படித்தான்... ஐபிஎல்லில் துவக்க வீரராதான் விளையாடுவேன்... அடம்பிடிக்கும் கேப்டன்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் 5வது போட்டியில் துவக்க வீரராக கேப்டன் விராட் கோலி களமிறங்கி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இந்திய அணியின் எதிர்வரும் போட்டிகளில் தான் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கி விளையாடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎல்லிலும் துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

துவக்கத்தில் களமிறங்கிய கோலி

துவக்கத்தில் களமிறங்கிய கோலி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டியில் இதுவரை இல்லாதவகையில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கி விளையாடினார் கேப்டன் விராட் கோலி. கடந்த 2014ல் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கு பிறகு ரோகித்துடன் அவர் துவக்க வீரராக நேற்றைய போட்டியில் விளையாடியுள்ளார்.

துவக்க வீரராக விளையாடுவேன்

துவக்க வீரராக விளையாடுவேன்

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, இனிவரும் போட்டிகளில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக உள்ளதாகவும் அதனால் துவக்க வீரராக விளையாடும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

துவக்க வீரராக களமிறங்கும் கோலி

துவக்க வீரராக களமிறங்கும் கோலி

இதுவரை வித்தியாசமான ஆர்டர்களில் தான் விளையாடியுள்ளதாகவும் மேலும் அடுத்த மாதம் துவங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் துவக்க வீரராக விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, ஐபிஎல் 2021 தொடரில் தேவ்தத் படிக்கலுடன் இணைந்து விராட் கோலி துவக்க வீரராக விளையாடுவார் என்று ஆர்சிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பான கோலி ஆட்டம்

சிறப்பான கோலி ஆட்டம்

நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 52 பந்துகளில் அவுட்டாகாமல் 80 ரன்களை குவித்துள்ளார். தொடர்ந்து மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் நேற்றைய ஆட்டத்தின் சோதனை முயற்சியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை அவுட்டாகாமல் விளையாடி அணியை வழிநடத்தினார்.

Story first published: Sunday, March 21, 2021, 14:30 [IST]
Other articles published on Mar 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+