ஒருநாள் போட்டிகள்ல ரோகித்தும் ஷிகரும்தான் ஓபனிங்... நான் இல்ல... என்ன இப்படி சொல்லிட்டாரு கேப்டன்!
புனே : இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளைய தினம் புனேவில் துவங்கவுள்ளது.
கடந்த டி20 போட்டியில் துவக்க வீரர் ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டினார்.
இது ஒருநாள் தொடரிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளைய போட்டியில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானும் தான் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று கேப்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒருநாள் தொடர் துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை தினம் புனேவில் துவங்கவுள்ளது. கடந்த இரு தொடர்களை இந்தியா வெற்றி கொண்டுள்ள நிலையில் வெற்றியை தொடர இந்தியாவும் ஒரு தொடரையாவது வெற்றி கொள்ள இங்கிலாந்தும் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி திட்டவட்டம்
கடந்த டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் விராட் தொடர்ந்து நாளைய போட்டியிலும் துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் நாளைய போட்டியில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தான் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று விராட் தெரிவித்துள்ளார்.

ரோகித்திற்கு நன்றி
நாளைய தொடரையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, தான் ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபிக்காக துவக்க வீரராக களமிறங்கி விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் துவக்க வீரராக களமிறங்கியது சிறப்பான முடிவு என்று ரோகித் கூறியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உத்தரவாதம் இல்லை
ஆனால் இந்திய அணிக்காக யார் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்பது குறித்த எந்த விதமான உத்தரவாதமும் இல்லை என்றும் விராட் கோலி கூறியுள்ளார். தான் அணிக்காக எந்த நிலையிலும் இறங்கி விளையாடுவேன் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications