Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தை பிடிக்க சொன்னா, எதை பிடிக்கிறாரு பாருங்க.. கோலியின் அநாகரிக செயல்..முகம் சுளிக்கும் வீடியோ

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் விராட் கோலி செய்த ஒரு அநாகரிக செயல் ரசிகர்களின் முகத்தை சுளிக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் டாப் வரிசை வீரர்கள் சொதப்பினர்.

குறிப்பாக விராட் கோலி 14 ரன்கள் சுப்மன் கில் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். 89 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா 48 ரன்களும் ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுத்து இந்திய அணியை பாலோ ஆனிலிருந்து காப்பாற்றினர்.

Virat kohli disrespectful act in fielding made fans uncomfortable

இதனால் தற்போது ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் 63 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 167 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் எடுத்து தடுமாறி வருகிறது. எனினும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 343 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கிறார்கள்.

இந்திய அணி மட்டும் முதல் இன்னிங்க்ஸில் விராட் கோலி, கில், புஜாரா ஆகியோர் சதம் அடித்திருந்தால் இந்த நேரம் ஆஸ்திரேலியா அணியின் இலக்கு வரை வந்திருக்கும் அதனால் இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவி இருந்திருக்கும்.

Virat kohli disrespectful act in fielding made fans uncomfortable

எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் இந்தியா கவனம் செலுத்தினால் வெற்றி பெற கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் பில்டிங் போது விராட் கோலி செய்த சேட்டை ஒன்று ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. பில்டிங்கில் நின்று கொண்டிருந்தபோது அங்கிருந்து வந்த விராட் கோலி அநாகரிக செயல் ஒன்றை செய்தார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.இது விராட் கோலி ஜாலிக்காக செய்தாலும் இதனை எத்தனையோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பார்கள் அது கோலி போன்ற ஒரு ஜாம்பவான் வீரர்களுக்கு நிச்சயம் மரியாதையை கொடுக்காது என ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

Story first published: Saturday, June 10, 2023, 16:45 [IST]
Other articles published on Jun 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+