
சாக்லேட்
இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் நாளில் இந்தியா பந்துவீசும் போது 22 ஆவது ஓவரில் தான் இந்த காமெடி சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதில் முகமது சமி பந்து வீசுவதற்கு தயாராக கொண்டிருந்த போது சிலிப் ஃபீல்டிங்கில் நின்ற விராட் கோலி, ஒரு குழந்தை போல் தனது பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

ரசிகர்கள் கேள்வி
அது மட்டுமல்லாமல் அருகில் நின்று கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயரிடம் விராட் கோலி, சாக்லேட் வேண்டம்மா என ஆசை காட்டினார். இதனையடுத்து அவருக்கும் சாக்லேட்டை விராட் கோலி தூக்கி எரிந்தார். ஃபீல்டிங் செய்யும் போது விராட் கோலி சாக்லேட் சாப்பிட்டது சரியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காரணமே வேறு
மேலும் விராட் கோலி, இனிப்பு சாப்பிடுவதை கைவிட்டதாக கூறிய நிலையில், அவர் ஏன் அதுவும் ஃபீல்டிங் செய்யும் போது சாப்பிட்டார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரமே வேறு. நேற்று அகமதாபாத்தில் வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும்.

கடும் நெருக்கடி
இதற்காக தான் விராட் கோலி எணர்ஜி சாக்லேட்டை சாப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விராட் கோலி ஃசிலிப் கேட்ச்சில் சொதப்புவதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், அவர் சாக்லேட் சாப்பிட்ட நிகழ்வு ரசிகர்களை ஷாக் ஆக வைத்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி வலுவான முறையில் பேட்டிங் செய்து வருவதால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











