Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

79 இன்னிங்ஸ்... 25 அரைசதம்... ரோகித்தை எட்டிப்பிடித்த கேப்டன்

சிட்னி : சர்வதேச டி20 வடிவத்தில் 25 சதங்களை அடித்திருந்த இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவின் சாதனையை கேப்டன் விராட் கோலி சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டி20 தொடரின் 3வது போட்டியில் தான் அடித்த அரைசதம் மூலம் இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது போட்டியில் அவர் 81 ரன்களை குவித்த நிலையில், ஆஸ்திரேலியா அந்த போட்டியில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

17ம் தேதி துவக்கம்

17ம் தேதி துவக்கம்

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் வரும் 17ம் தேதி பகலிரவு போட்டியுடன் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. வெளிநாட்டில் இந்தியா விளையாடும் முதல் பகலிரவு போட்டி இது. இந்தியாவில் வங்கதேசத்துடன் கடந்த ஆண்டில் விளையாடிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

மீண்டும் திரும்புமா?

மீண்டும் திரும்புமா?

முன்னதாக ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோதிய இந்தியா, ஒருநாள் தொடரை கைநழுவியும், டி20 தொடரை வெற்றி கொண்டும் உள்ளது. இந்நிலையில் தற்போது விளையாடவுள்ள டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று 2018-19ல் அந்த அணியை சொந்த மண்ணில் வெற்றி கொண்ட சரித்திரத்தை மீண்டும் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3வது போட்டி

3வது போட்டி

இதனிடையே, நடந்து முடிந்துள்ள டி20 தொடரின் 3வது போட்டியில் கேப்டன் விராட் கோலி 81 ரன்களை குவித்திருந்தார். அந்த போட்டியில் இந்தியா வெல்லும் தீவிரத்துடன் களமிறங்கிய நிலையில், அனைத்து முயற்சிகளும் வீணானது. முழுமையான தொடர் வெற்றியை இந்தியா பெற முடியாத வகையில் அந்த போட்டியில் 12 ரன்களுக்கு தோல்வியடைந்தது.

ரோகித் சாதனையை சமன்செய்த கோலி

ரோகித் சாதனையை சமன்செய்த கோலி

இந்நிலையில் இந்த போட்டியில் அரைசதத்தை கடந்துள்ள விராட் கோலி, முன்னதாக ரோகித் சர்மா மேற்கொண்ட டி20 பேட்டிகளில் 25 அரைசதம் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். இந்த சாதனையை 100 இன்னிங்சில் ரோகித் மேற்கொண்ட நிலையில் 79 இன்னிங்சில் விராட் கோலி இதை செய்துள்ளார். ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் 19 அரைசதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

Story first published: Thursday, December 10, 2020, 10:48 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+