Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதம் அடிக்க பந்தை வீணடித்தேனா? விராட் கோலி தந்த விளக்கம்.. ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட கிங்

புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 8 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடித்திருக்கிறார். இது விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட்டில் 48வது சதம் ஆகும்.

இன்னும் போட்டியை விரைவில் முடிக்காமல் விராட் கோலி வெற்றிக்கு இரண்டு பந்துகள் இருந்தபோது சதம் அடிக்க வேண்டும் என காத்திருந்து அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Virat kohli Explained why he wasted balls for his century vs bangladesh

அதற்கு முன்பு இருந்தும் சதம் அடிப்பதற்காக விராட் கோலி சில பந்துகளை வீணடித்தார். இது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக விராட் கோலியை விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அது என்ன என்று தற்போது பார்க்கலாம். சதம் அடித்ததற்காக விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய அவர் ஜடேஜாவிடம் இருந்து ஆட்ட நாயகன் விருதை திருடியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

உலகக் கோப்பை போட்டியில் அணிக்காக நான் பெரிய பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன். உலகக்கோப்பை போட்டியில் நான் கடந்த முறை அதிக அரை சதம் அடித்தேன். இதனால் இம்முறை பெரியதாக அடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தேன். கில்லிடம் நான் இதை தான் அடிக்கடி சொல்வேன். இது போன்ற சூழல் குறித்து நாம் கனவு கண்டிருப்போம்.

அதை நினைத்துக் கொண்டு தூங்கவும் செய்வோம். எப்படி ஆட்டத்தை தொடங்க வேண்டும் என நினைத்தமோ அதேபோல் இன்று நான் விளையாடினேன். இதன் மூலம் நானே என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஆடுகளமும் நன்றாக இருந்ததால் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. பீல்டர்களுக்கு இடையே பந்தை அடித்து பவுண்டரிகளை எடுக்க வேண்டும்.

இதுதான் என்னுடைய ஆட்டத்தின் யுக்தி. ட்ரெஸ்ஸிங் ரூமும் நல்ல முறையில் இருக்கிறது. அணியின் உத்வேகமும் சிறந்த முறையில் இருக்கிறது. அணியில் இருக்கும் உத்வேகத்தால் தான் இது போன்ற ஆட்டத்தை எங்களால் விளையாட முடிகிறது.இவ்வளவு பெரிய மக்கள் முன்பு விளையாடியதை ஸ்பெஷலாக நான் நினைக்கிறேன் என்று விராட் கோலி கூறினார்.

Story first published: Thursday, October 19, 2023, 22:09 [IST]
Other articles published on Oct 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+