
விராட் கோலி
பெங்களூரு அணி முதல் வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளது. விராட் கோலிக்கு கடந்த ஐ.பி.எல். தொடரில் 17 கோடி ரூபாய் கொடுத்த பெங்களூரு அணி நிர்வாகம் , தற்போது 15 கோடி ரூபாய் தான் தந்துள்ளது. இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற அணிகளுக்காக விளையாட மாட்டேன் என்று விராட் கோலி முன்பே கூறியிருந்த நிலையில் தற்போது அவர் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்வெல்லை 2வது வீரராக பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது. அவருக்கு 11 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என கலக்கி வந்த மேக்ஸ்வெல், பெங்களூரு அணியில் தொடர்ந்து பயணிப்பது, கூடுதல் பலமாகவே கருதப்படுகிறது.

முகமது சிராஜ்
இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மூன்றாவது வீரராக பெங்களூரு அணி தக்க வைத்து கொண்டுள்ளது. முகமது சிராஜ்க்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனிடையே, கடந்த ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஹர்சல் பட்டேலை பெங்களூரு அணி நிர்வாகம் தக்க வைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாஹல் இல்லை
சுழற்பந்துவீச்சாளர் சாஹலை 4வது வீரராக 6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்து கொள்ள பெங்களூரு நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் தனது அனுபவத்திற்கு 6 கோடி ரூபாய் குறைவு என்று முடிவு எடுத்துள்ள சாஹல், ஏலத்தில் பங்கேற்க முடிவு எடுத்துள்ளார். இதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதே போன்று அதிரடி தொடக்க வீரர் படிக்கல்லையும் பெங்களூரு அணி தேக்க வைக்கவில்லை.


Click it and Unblock the Notifications











