Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி பதவி பறிப்பு..!! பி.சி.சி.ஐ. இது உங்களுக்கே நியாயமா?

மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Captaincy மாற்றத்தின் பின் Rohit-ன் சம்பளம் என்ன? | Oneindia Tamil

ஏற்கனவே டி-20 போட்டிகள், ஐ.பி.எல். தொடரிலிருந்து கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் கேப்டனாக தொடர்வேன் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லவில்லை என்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 2017 சாம்பியன்ஸ் கோப்பை, 2019 உலகக் கோப்பை, 2021 டி20 உலகக் கோப்பை என முக்கிய தொடர்களில் விராட் கோலி கோட்டைவிடுவதாகவும், ஐ.பி.எல். தொடரிலும் அவரது தலைமையிலான அணி ஒரு கோப்பையையும் வெல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்தது.இதனால் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

கோலி ரசிகர்கள்

கோலி ரசிகர்கள்

பி.சி.சி.ஐ.யின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விராட் கோலி ரசிகர்கள் ShameonBCCI என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இதில் விராட் கோலி பி.சி.சி.ஐ.யால் பழிவாங்கப்படுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தோனியை விட அதிக வெற்றி சதவீகதத்தை பெற்றுள்ள விராட் கோலியை பி.சி.சி.ஐ. நடத்திய விதம் சரியில்லை என்று ரசிகர்கள் சாடியுள்ளனர்.

மீம்ஸ்

மீம்ஸ்

மேலும் பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா, பயிற்சியாளர் டிராவிட், புதிய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு எதிராக விராட் கோலி ரசிகர்கள் மீம்ஸ் உருவாக்கி அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். விராட் கோலி எப்போது நினைக்கிறாரோ அப்போது தான் ராஜினாமா செய்ய வேண்டும். பி.சி.சி.ஐ அவரை நீக்கி அவமானப்படுத்தி விட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

மேலும் விராட் கோலியின் சாதனைகளை பட்டியலிடும் ரசிகர்கள், நாட்டுக்காக விளையாடியவர்களுக்கு இது தான் பி.சி.சி.ஐ. தரும் மரியாதையா என்று சாடியுள்ளனர். 95 போட்டிகளில் கேப்டனாக இருந்து 65 போட்டிகளில் வென்ற விராட் கோலி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் ஒருநாள் தொடரை வென்றுள்ளதாகவும், இனி இப்படி ஒரு வெற்றியை இந்தியா பெறபோவதில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Story first published: Thursday, December 9, 2021, 20:11 [IST]
Other articles published on Dec 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+