Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா? நண்பன் சச்சினுக்காக செய்தாரா? ரசிகர்கள் கண்டனம்

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட வில்லை.

மேலும் முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஏழாவது இடத்திலும் விராட் கோலி பேட்டிங்கே வராமலும் இருந்தார். இதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Virat kohli fans huge accusation on rahul dravid

இதனால் பலரும் டிராவிடை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கிறது. சச்சின், கங்குலி, டிராவிட் லக்ஷ்மன் ஆகியோர் எல்லாம் ஒரே அணியாக வளர்ந்து விளையாடியவர்கள். தற்போது சச்சினின் சாதனைகளை விராட் கோலி துரத்திக் கொண்டு வருகிறார். இன்னும் நான்கு சதங்கள் அடித்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை உடைத்து விடுவார் .

இந்த நிலையில் தான் சச்சினின் சாதனையை யாரும் உடைத்து விடக்கூடாது என்பதற்காக ராகுல் டிராவிட் விராட் கோலியை விளையாட அனுமதிக்க வில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் டிராவிட்டை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.விராட் கோலி ரசிகர்களின் இந்த குற்றச்சாட்டு ஆதாரம் அற்றவை என ரோகித் சர்மா ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

உலகக்கோப்பை இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள இந்த சூழலில் நடுவரிசை வீரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதைக் கூட புரிந்து கொள்ளாமல் விராட் கோலி ரசிகர்கள் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்து இருக்கிறார்கள்.

உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத ஒரு அணியுடன் ஸ்டார் வீரர்கள் ஏன் விளையாட வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பலம் குன்றிய அணிகளுடன் மோதி விட்டு ரெகார்டுகளை படைக்க பார்க்கிறீர்களா என்றும் ரோகித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Saturday, July 29, 2023, 22:26 [IST]
Other articles published on Jul 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+