For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியும் அவுட்.. ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா.. ரசிகர்களின் நம்பிக்கை உடைந்தது

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு சுக்கு நூறாக உடைத்துள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் குறைந்தபட்சம், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் பக்கமாவது வந்தால் மட்டுமே வெற்றி பெற மடியும். இதன் காரணமாக, செம பார்மில் இருக்கும் சுப்மன் கில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Virat kohli got out for 14 runs as india struggling to avoid follow on

ஆனால், கில் 13 ரன்களும், ரோகித் சர்மா 15 ரன்களும் , புஜாரா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கும் ஏமாற்றதாக காத்திருந்தது. 31 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, பொறுப்பாக விளையாடி 14 ரன்கள் சேர்த்தார்.

இதில் விராட் கோலி அடித்த கவர் டிரைவ் ஒன்று, அவர் இன்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்த மாதிரி பந்துகளை சரியாக விட்டு, பொறுமை காத்தார். போலாந்து, கம்மின்ஸ் ஆகியோர் ஓவரை எல்லாம் விராட் கோலி தப்பித்தார்.

ஆனால் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஒன்று யாரும் எதிர்பாராத வகையில் எகிறியது. இதனை விராட் கோலி தடுக்க முயன்ற போது, பேட்டில் பந்து பட்டு, ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதனால், 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க 269 ரன்கள் என்ற ஸ்கோரை தொட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 8, 2023, 21:22 [IST]
Other articles published on Jun 8, 2023
English summary
Virat kohli got out for 14 runs as india struggling to avoid follow on விராட் கோலியும் அவுட்.. ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா.. ரசிகர்களின் நம்பிக்கை உடைந்தது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+