Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி ஆட்டோகிராப் போட்ட ஜெர்சி.. ரசிகர்களுக்கு வழங்கும் விஸ்டன்.. விலை எவ்வளவு தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் இந்திய அணி ஜெர்சி விலைக்கு வர உள்ளது.

சச்சினுக்கு பிறகு உலக கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் விராட் கோலி. தற்போது அவருடைய பார்ம் முன்பு போல் இல்லை.

கடைசியாக அவர் சதம் விளாசி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. எனினும் அவருடைய மவசு குறையவில்லை.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி, இம்முறை ரன்கள் பட்டாசு போல் கொளுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. எல்லாத்துக்கும் மேல், அவர் 2 முறை கோல்டன் டக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

Virat kohli Hand signed Indian jersey selling by wisden for record price

இருப்பினும் விராட் கோலி மீது ரசிகர்கள் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், விஸ்டன் நிறுவனம், தனது இணையத் தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி கையெழுத்திட்ட இந்திய அணியின் ஜெர்சி விற்பனைக்கு வந்துள்ளது.

அதன் விலை ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 376 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்சியை பிரேம் செய்து, விராட் கோலியின் புகைப்படங்களுடன் விஸ்டன் வழங்க உள்ளது. ஆனால், இந்த ஒரு ஜெர்சி மட்டும் தான் விற்பனைக்கு வர உள்ளது. இதனால் இதனை வாங்க கோலி ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Story first published: Tuesday, April 26, 2022, 17:53 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+