Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று சச்சின், கவாஸ்கரை முந்தினார் கோலி.. ஆனா பிராட்மேன் சாதனையை நெருங்க முடியலையே!

ராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தன் 24வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கோலி, ஜடேஜா, ப்ரித்வி ஷா உள்ளிட்ட மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தினர்.

கோலி 24வது சதம்

கோலி 24வது சதம்

கோலி இன்று 184 பந்துகளில் சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 24வது சதமாகும். கேப்டனாக அவரது 17வது டெஸ்ட் சதம். மேலும், குறைந்த இன்னிங்க்ஸ்களில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் கோலி.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

குறைந்த இன்னிங்க்ஸ்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் இருக்கிறார். அவர் 66 இன்னிங்க்ஸ்களில் 24 டெஸ்ட் சதங்களை கடந்துள்ளார். கோலி 123 இன்னிங்க்ஸ்களில் 24வது சதத்தை எட்டியுள்ளார். பிராட்மேனின் பல சாதனைகளை யாரும் நெருங்க கூட முடியாது என மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.

சச்சின், கவாஸ்கரை முந்திய கோலி

சச்சின், கவாஸ்கரை முந்திய கோலி

வேகமாக 24 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் பிராட்மேன், கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இருவர், சச்சின் மற்றும் கவாஸ்கர். சச்சின் 125 இன்னிங்க்ஸ்களிலும், கவாஸ்கர் 128 இன்னிங்க்ஸ்களிலும் தங்கள் 24வது சதத்தை எடுத்துள்ளனர்.

ஆயிரம் ரன்கள் சாதனை

ஆயிரம் ரன்கள் சாதனை

மேலும், இந்திய அளவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கும் மேல் குவித்து பெரும் சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஹைடன் 5 ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரம் ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். கோலி மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரம் ரன்களுக்கும் மேல் எடுத்தால் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கலாம்.

Story first published: Friday, October 5, 2018, 18:38 [IST]
Other articles published on Oct 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+