விராத் வேண்டாம்.. சச்சின் மட்டுமே.. வாங்கடேவில் அகற்றப்பட்ட கோஹ்லியின் பதாகைகள்!
மும்பை: மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று விராத் கோஹ்லியின் விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.
சச்சின் படத்தை மறைக்கும் வகையில் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தால் அந்த பதாகைகளை அகற்றி விட்னர்.
ரசிகர்கள் சச்சினை மட்டுமே பார்க்க விரும்பியதாலும், தேவையில்லாத திசை திருப்பல்களை விரும்பாததாலும், விராத் கோஹ்லி விளம்பர பதாகைகளை மும்பை கிரிக்கெட் சங்கமே அகற்றி விட்டது.

சச்சினை கெளறவிக்க 51 பதாகைகள்
சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்துள்ளதைக் கெளரவிக்கும் வகையில் வாங்கடே ஸ்டேடியத்தில் 51 சச்சின் படம் தாங்கிய பதாகைகளை வைத்துள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம்.

குறுக்கே வந்த கோஹ்லி
இந்த நிலையில் விராத் கோஹ்லியின் விளம்பரப் பதாகைள் பெரிய சைஸில் சச்சின் படத்தை மறைக்கும் வகையில் இருந்தது ரசிகர்களை எரிச்சலுக்குள்ளாக்கியது.

விரட்டுங்கப்பா விராட்டை...
இதைப் பார்த்த மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், விராத் கோஹ்லி பதாகைகளை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அவை அகற்றப்பட்டன.

சச்சினுக்கு ஸ்பெஷல் தொப்பி
இதற்கிடையே, நேற்று முதல் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் டோணி, சச்சினுக்கு ஒரு ஸ்பெஷல் தொப்பியைக் கொடுத்தார். அதை அணிந்து கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தார் சச்சின்.


Click it and Unblock the Notifications