ரசிகர்களுக்கு விராட் கோலி மறைமுக மேசஜ்.. என்ன சொல்ல வராரு.. சேஸிங் முன் இதற்கு தேவையா?
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் விராட் கோலி தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸை விளையாட வேண்டும்.
பலரும் விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் சிலர் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்தவுடன் விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் நமக்கு அதிக கவலைகளும் பயமும் சந்தேகமும் இருந்தால் நாம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியாது. சில விஷயங்களை நாம் விட்டு விடுவதற்கு பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் ஷாக் ஆகி நின்றனர்.
விராட் கோலியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சவால் தற்போது காத்திருக்கும் நிலையில் அவர் ஏன் இவ்வாறு பதிவு போட்டு இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணி தோல்வி அடையப்போவதை தான் முன்கூட்டியே விராட் கோலி பதிவாக போட்டு இருக்கிறாரா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதே போல் தான் நேற்று முன்தினம் instagram பக்கத்தில் மற்றவர்களுக்கு பிடிக்காத படி நடந்து கொள்ளும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கு அடுத்தவர்களின் கண்ணோட்டம் என்ற சிறையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றும் பதிவிட்டு இருந்தார். விராட் கோலி மதிய உணவை ஆட்டமிழந்தவுடன் வந்து பெவிலியனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்து ரசிகர்கள் ஆட்டம் இழந்தவுடன் எந்த கவலையும் இன்றி விராட் கோலி இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர். அதற்காகத்தான் விராட் கோலி தொடர்ந்து இது போன்ற பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வைத்து வருவதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் இப்படி பதில் சொல்வதற்கு பதில் ஆடுகளத்தில் இன்று விராட் கோலி தனது பேட்டால் பதில் சொன்னால் சிறப்பான சம்பவமாக இருக்கும் என்று நடுநிலையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications