Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி ரன் எடுக்காததற்கு அவருடைய மனைவியை குறை சொல்வதா? அவரின் சாதனையை மறக்காதீங்க-நவஜோத் சித்து ஆவேசம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பியதற்கு அவருடைய மனைவியை இழுத்துப் பேசுவதற்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜீத் சிங் சித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தாலும் அடுத்த நான்கு டெஸ்ட் போட்டியிலும் சொதப்பினார்.

அந்த தொடரில் மொத்தமாகவே அவர் 190 ரன்கள் தான் அடித்தார். இதனால் விராட் கோலி மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அது மட்டும் இல்லாமல் கோலி தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிடுதால் கிரிக்கெட்டை மறந்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ind vs aus rohit sharma virat kohli navjot singh vs

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சிந்து ஒரு வீரர் இரண்டு மாதம் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை நீங்கள் உறுதியாக நீக்க முடியாது. நாம் செய்த சாதனைகளை வைத்து நாம் அணியின் நீடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் கொஞ்சம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

பிரபல வீரர்கள் மார்க் டைலர் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து சரியாக விளையாடவில்லை. அசாருதீனும் இப்படி தான் மோசமாக விளையாடினார். ஏன் நமது முன்னாள் கேப்டன் கங்குலியே நான் எட்டு இன்னிங்ஸில் சொதப்பினாலும், நான் மீண்டும் ஃபார்ம்க்கு வர ஒரு இன்னிங்ஸ் போதும் என்று கூறினார். இதே விராட் கோலி, ரோஹித் சர்மா தான் ஆறு மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு உலக கோப்பையை வென்று தந்தார்கள்.

தற்போது ஒரு நாள் கிரிக்கெட் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. வெறும் இரண்டு வீரர்கள் மீது குறி வைத்துவிட்டு மற்றவர்களை அனைவரும் கவனிக்காமல் விட்டு விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வீரர் தான் தொடர்ந்து இந்திய அணியில் ரன்கள் குவித்து வருகிறார்கள். குறை கூறுவது என்பது மிகவும் சுலபமான விஷயம். கற்களை எறிவது மிகவும் ஈஸி.

ஆனால் ஒரு சிலரே தங்கள் மீது எறியப்படும் கற்களை வைத்து வீடு கட்டுவார்கள். விராட் கோலிக்கு விமர்சனங்களை எதிர்கொள்வது இது முதல் முறை கிடையாது. ஆனால் சில ரசிகர்கள் விராட் கோலியின் மனைவியை தேவையில்லாமல் இழுத்து விமர்சனம் செய்கிறார்கள்.

அது மிகவும் தவறு. நமது ஹீரோக்களை நாம் மதிக்க வேண்டும். பொறுமையாக இருங்கள். அனைவருமே கடின காலத்தை சந்திப்பார்கள். ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் தன்னுடைய உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும். அவரும் நிச்சயம் ஒரு நல்ல முடிவை கண்டுபிடிப்பார் என்று நவஜோத் சிங் சிந்து கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 9, 2025, 23:59 [IST]
Other articles published on Jan 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+