For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின்,பாண்டிங்கின் 3 முக்கிய சாதனைகள்.. விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு.. ஆஸி ஒருநாள் தொடரில் குறி

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 3 முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 186 ரன்கள் விளாசி அசத்தினார்.

இந்த நிலையில் நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி ஒருநாள் தொடரிலும் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி 46வது சதம்

கோலி 46வது சதம்

இந்த நிலையில் நாளை தொடங்கும் முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலியை நம்பியே இந்திய அணியின் பேட்டிங் இருக்கிறது. ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுவதால், விராட் கோலி நாளை சதம் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தற்போது விராட் கோலி 46 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

முறியடிக்க வாய்ப்பு

முறியடிக்க வாய்ப்பு

சச்சினுடைய சாதனையை முறியடிக்க அவருக்கு வெறும் 3 சதம் தான் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று சதங்கள் அடிப்பது மிகவும் சிரமமான காரியம் என்றாலும், சச்சினின் சாதனையை மிக விரைவாக கடந்த வீரர் என்ற பெருமை படைக்க கோலிக்கு வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தேவைப்படும் ரன்கள்

தேவைப்படும் ரன்கள்

அதாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது 5358 ரன்கள் உடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். பாண்டிங் 5,406 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதனால் பாண்டிங்-ஐ முந்துவதற்கு வெறும் 48 ரன்கள் தான் கோலிக்கு தேவைப்படுகிறது. இந்த பட்டியலில் டெண்டுல்கர் 6976 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.இதேபோன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களைத் தொட விராட் கோலிக்கு 191 ரன்கள் தான் தேவைப்படுகிறது.

13 ஆயிரம் ரன்கள்

13 ஆயிரம் ரன்கள்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் 18,426 ரன்கள் உடனும் சங்ககாரா, 14,234 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும் பாண்டிங் 13 ஆயிரத்து 74 ரன்கள் உடன் மூன்றாம் இடத்திலும் ஜெயசூர்யா 13,430 ரன்களிலிருந்து உடன் நான்காம் இடத்தில் இருக்கிறார். இந்தத் தொடரில் கோலி 13 ஆயிரம் ரன்களை தொட்டுவிட்டால் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். டெண்டுல்கர் 321 இன்னிங்ஸில் தான் 13,000 ரன்களை தொட்டார். தற்போது விராட் கோலி 262 இன்னிங்ஸில் 13000 ரன்களை நெருங்கி இருக்கிறார்.

Story first published: Thursday, March 16, 2023, 16:22 [IST]
Other articles published on Mar 16, 2023
English summary
Virat kohli is all set to break 3 record of sachin and ponting records in odi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+