Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் பாதி, ஷேவாக் பாதி.. கலந்து செய்த கலவை யார்னு தெரியுமா?... குரோ சொல்றார் கேளுங்க!

ஆக்லாந்து: சச்சின் டெண்டுல்கரின் ஒரு பாதியாகவும், ஷேவாக், டிராவிட் ஆகியோர் மறு பாதியாகவும் கலந்த கலவையாக இருக்கிறார் விராத் கோஹ்லி என்று கூறியுள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோ கூறியுள்ளார்.

Virat Kohli

ஜெப் குரோ, மார்ட்டின் குரோ என்று அந்தக் காலத்தில் இருவர் இருந்தனர். இருவருமே அண்ணன் தம்பிகள். இருவருமே நியூசிலாந்து அணிக்காக ஆடியவர்கள்.

இந்திய அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லிக்கு மார்ட்டின் குரோ பெரும் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணியின் கலங்கரை விளக்கம் என்று கோஹ்லியை சொல்லலாம். உண்மையான சாம்பியனாக, கேப்டனாக அவர் திகழ்கிறார்.

ஆட்டத்திறனுடன் இருக்கும் அவர் நுணுக்கமான விஷயங்களையும் எளிதில் கற்றுக் கொள்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

சச்சின் போல அசாதாரணமாக இருக்கிறார், டிராவிட் போல தீவிரமாக இருக்கிறா். ஷேவாக் போல தைரியமாக இருக்கிறார். மொத்தத்தில் இவர்களின் கலவையாக அவர் தெரிகிறார் என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார் குரோ.

Story first published: Tuesday, February 4, 2014, 15:36 [IST]
Other articles published on Feb 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+