Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியில் கோலி காயம்.. ஹர்சல் பட்டேல் எறிந்த பந்து தாக்கியது.. ஆடுகளத்தில் சுருண்டு விழுந்தார்

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் அரையிறுதி ஆட்டத்திற்கு முன் பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்ட போது காயமடைந்தார்.

நாளை வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியமான மைதானம் என்பதால், அரையிறுதி ஆட்டத்தில் அவருடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அடிலெய்ட் மைதானம்

அடிலெய்ட் மைதானம்

விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் கோலி 907 ரன்களை அடித்திருக்கிறார். இதில் சராசரி 75.88 ஆகும். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அடிலெய்டில் கோலி 3 சதம், 4 அரைசதம் அடித்திருக்கிறார். 4 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கோலி, 2 சதம் அடித்திருக்கிறார்.

பயிற்சி

பயிற்சி

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, 2 போட்டிகளில் விளையாடி 154 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 2 அரைசதம் அடங்கும். இதனால், அரையிறுதியில் விராட் கோலி பெரிதாக சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி பயிற்சி செய்து வந்தார். அப்போது ஹர்சல் பட்டேல் பந்தை கோலி எதிர்கொண்டு வந்தார்.

கோலி காயம்

கோலி காயம்

அப்போது எதிர்பாராத விதமாக ஹர்சல் பட்டேல் வீசிய பந்தை கோலி கணிக்க தவறியதால், அது அவரை தாக்கியது. இதனால் வலியால் துடித்த விராட் கோலி மைதானத்தில் சுருண்டு விழுந்து சிறிது நேரம் மைதானத்திலேயே அப்படியே அமர்ந்து இருந்தார். இதனை பார்த்ததும், அங்கிருந்த சக வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பாதி உயிர் சென்றுவிட்டது.

மீண்டும் விளையாடினார்

மீண்டும் விளையாடினார்

ஆனால் விராட் கோலி மைதானத்தை விட்டு செல்லாமல், மீண்டும் தனது பயிற்சியை தொடங்கினார். இதனை பார்த்ததும் தான் போன உயிர் திரும்பி வந்தது. எனினும் விராட் கோலிக்கு அடைந்த காயம் தொடர்பான முழு தகவலை பிசிசிஐ தெரிவிக்கவில்லை. மேலும் கோலி மீண்டும் பயிற்சியை தொடங்கியதால் , பிரச்சினை இருக்காது என கருதப்படுகிறது.

Story first published: Wednesday, November 9, 2022, 13:48 [IST]
Other articles published on Nov 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+