Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. விராட் கோலி நீக்கம்.. 3 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Recommended Video

IND vs ENG 1st ODI இந்திய அணி அபார வெற்றி *Cricket

3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்துக்கு இந்திய அணி வந்த போது அதில் விராட் கோலி இடம்பெற்று இருந்தார். இதனால் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கோலி இல்லை

கோலி இல்லை

இதில் டாஸ் வென்று பந்தவீச்சை தேர்வு செய்த கேப்டன் ரோகித் சர்மா, ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருப்பதாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், பந்துவீசுவதாக தெரிவித்தார். இந்திய அணியில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விளையாடவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்தார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து ஆதிக்கம்

இங்கிலாந்து ஆதிக்கம்

இங்கிலாந்து அணியிலும் பட்லர் முழு நேர கேப்டனாக முதல் ஒருநாள் போட்டியில் செயல்படுகிறார். லண்டன் ஓவல் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 7 ஒருநாள் போட்டியிலும், 7 ஆட்டங்களிலும் இங்கிலாந்தே வெற்றி பெற்றுள்ளது. . 3 ஆண்டுகளுக்கு பிறகு பட்லர், ஸ்டோக்ஸ், பாரிஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் இணைந்து விளையாடுகின்றனர். இந்திய அணி 5 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

இந்திய அணி

இந்திய அணி

ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என கருதப்படுவதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அது சிக்கலாக அமையலாம். இந்திய அணி 1. ரோகித் சர்மா, 2, ஷிகர் தவான், 3, ஸ்ரேயாஸ் ஐயர்,, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6, ஹர்திக் பாண்டியா, 7. ஜடேஜா. 8, முகமது ஷமி, 9, பும்ரா 10, பிரசித் கிருஷ்ணா. 11. சாஹல்

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

1, ஜேசன் ராய் 2,பாரிஸ்டோ, 3, ஜோ ரூட், 4, பென் ஸ்டோக்ஸ், 5, ஜாஸ் பட்லர்6, லியாம் லிவிங்ஸ்டோன், 7, மொயின் அலி, 8, கிரைக் ஓவர்டன். 9, டேவிட் வில்லி, 10, பிரைடன் கிரிஸ். 11. ரீஸ் டோப்லி. இங்கிலாந்து அணியின் பேட்டிங்வரிசையை சமாளிப்பது இந்தியாவுக்கு பெரும் சிக்கலாக இருக்கும்.

Story first published: Tuesday, July 12, 2022, 17:35 [IST]
Other articles published on Jul 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+