For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டென்ஷன்.. தடுமாற்றம்.. விராட் கோலி 1 ரன்னில் அவுட்.. முடிவுக்கு வருகிறதா கோலியின் டி20 கிரிக்கெட்?

டென்ஷன்.. தடுமாற்றம்.. விராட் கோலி 1 ரன்னில் அவுட்.. முடிவுக்கு வருகிறதா கோலியின் டி20 கிரிக்கெட்?

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.

சமீப காலமாக விராட் கோலியின் பேட்டிங் மோசமாக உள்ளது. இங்கிலாந்தக்கு எதிரான 5வது டெஸடில் 11 மற்றும் 20 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஏற்கனவே அதற்கு முன்பு நடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 3 முறை டக் அவுட் ஆனார். மேலும், அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் கடுமையான சரிவை சந்தித்தது.

தீபக் ஹூடா அதிரடி

தீபக் ஹூடா அதிரடி

தற்போது விளையாடி வரும் இந்திய அணியில் விராட் கோலியை விட இளைஞர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவருக்கு பதிலாக விளையாடிய தீபக் ஹூடா,அயர்லாந்துக்கு எதிராக 47 ரன்கள், 104 ரன்கள் விளாசி இருந்தார். இதே போன்று டெர்பிஷியர்க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 59 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 33 ரன்கள் என்று தீபக் ஹூடா அடித்து இருந்தார்.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

விராட் கோலி வருவதால், தீபக் ஹூடாவை இந்திய அணி நிர்வாகம் நீக்கியது. இது ரசிகர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கு ஏற்றார் பால் விராட் கோல 1 ரன்னில் வெளியேறினார். கோலி அவுட்டானதும். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

தடுமாறிய இந்திய அணி

தடுமாறிய இந்திய அணி

இதனால் இந்திய அணி 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. விராட் கோலி மட்டும் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்சை ஒருங்கிணைந்து விளையாடி இருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது. ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அஸ்வினை நீக்கும் போது , டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலியை ஏன் நீக்க கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

முடிவுக்கு வருகிறது

முடிவுக்கு வருகிறது

விராட் கோலி ஆட்டமிழந்தது குறித்து பேசிய கிரிக்கெட் விமர்சகர் ஹர்சா போக்லே, டி20 கிரிக்கெட்டில் எடுத்த உடன் அதிரடியாக ஆட வேண்டும். இது விராட் கோலி தற்போதைய இருக்கும் ஃபார்ம்க்கு சரி வராது. ஒருநாள் கிரிக்கெட்டில் தமக்கான நேரத்தை எடுத்து கொண்டு இன்னிங்சை கட்டமைக்கலாம் என்று கூறினார். விராட் கோலி இப்படியே விளையாடி கொண்டு இருந்தால் அவருடைய டி20 கிரிக்கெட் வாழ்க்கை மிக விரைவில் முடிவுக்கு வரலாம்.

Story first published: Saturday, July 9, 2022, 20:52 [IST]
Other articles published on Jul 9, 2022
English summary
Virat kohli is out for 1 run in 2nd England t20 makes fans angry டென்ஷன்.. தடுமாற்றம்.. விராட் கோலி 1 ரன்னில் அவுட்.. முடிவுக்கு வருகிறதா கோலியின் டி20 கிரிக்கெட்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+